யாராலும் முடியாததை சாதிக்கவே பிறப்பெடுத்த 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திஜரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட திறமைகள், விசேட ஆளுமைகள் மற்றும் குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பபப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள், இயல்பாகவே எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மற்றும் அசாத்திய தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி மற்றவர்களால் முடியாத விடயங்களை சாதிப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் சக்தி மற்றும் ஆற்றலின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், இயல்பாகவே உற்சாகமானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சவால்களை அதிகம் விரும்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் யாராலும் செய்ய முடியாத விடயங்களில் சாதனை படைப்பது தான் இவர்களுக்கு திருப்தியை கொடுக்கும்.
இவர்கள் கடினமாகத் தோன்றும் விடயங்களை தான், ஆர்வத்துடன் செய்கிறார்கள், அதில் வெற்றி பெற எப்போதும் கடினமாக உழைக்கும் குணம் மற்றும் விடாமுயற்சி இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் கிரகங்களின் அதிபதியான சூரியனால் ஆளப்படுவதால், மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை கிடைக்கும்.
மற்றவர்கள் முயற்ச்சி செய்வதற்கே பயப்படும் துறையில் இந்த ராசியினர் தங்களின் வெற்றிக்கொடியை நாட்டும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மர்மமான குணத்துக்கும் மனவலிமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மாற்றத்திற்கும் சக்திக்கும் உரிய கிரகமான புளூட்டோவால் அவர்கள் ஆளப்படுவதால், கடினமான விடயங்களை முயற்ச்சிக்கும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
வாழ்க்கை எத்தனை முறை அவர்களை வீழ்த்தினாலும், அவர்கள் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் அதிலிருந்து மீண்டு சாதனை படைப்பார்கள். இந்த ராசியினரை புரிந்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |