நேர்மை என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே நம்மிடம் பழகுபவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாகவும், விருப்பமாகவும் இருக்கும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்ப்பது போல் அவர்கள் மற்றவர்களிடம் நடந்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது கிடையாது.
அப்படி ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்களின் வார்த்தையை ஒருபோதும் காப்பாற்றாத, நேர்மையற்ற ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சீக்கிரம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் அரிதாகவே பொறுமையாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் கொஞ்சடும் சிந்திக்காமல், அவசர அவசரமாக வாக்குறுதிகளை அளிப்பார்கள், ஆனால் அவற்றை அதைவிட வேகமாக மறந்துவிடுவார்கள். இவர்கள் வாக்கை காப்பாற்றியததாக சரித்திரம் இருக்காது.
இவர்கள் தங்களுக்கு காரியம் நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் அது நீதியின் பாதையில் இருக்கின்றதா என்பது குறித்து ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனிப்பட்ட விடங்களை குறிப்பிட்ட சில நபர்களிடம் மட்டுமே பகிர்ந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வசீகரமான பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் பெரும்பாலும் கோட்டைவிட்டு விடுவார்கள்.
இவர்கள் புத்திசாலித்தனமானவர்கள், மற்றவர்களை வெல்வதில் திறமையானவர்கள், வார்த்தைகளால் சாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இருப்பினும் இவர்களிடம் நேர்மை இருப்பது அரிது.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் மற்றவர்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இருந்தபோதிலும், அவர்கள் மற்றவர்களை எளிதில் ஏமாற்றக் கூடியவர்களாகவும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறுவதை அல்லது நிறைவேற்ற முடியாமல் போவதை தங்களின் அழுகையால் சமாளித்துவிடும் அளவுக்கு சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் நீதி நேர்மையை எதிர்ப்பார்ப்பது முட்டாள்த்தனம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |