மழை நேரத்தில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் டீ- எப்படி செய்யணும் தெரியுமா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகின்றது.
தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. வழமையாக கோடைக்காலங்களை விட மழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும்.
காலநிலை மாற்றத்தின் போது சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளே காலநிலை மாற்றத்தினால் அவஸ்தைப்படுவார்கள்.
இந்த நிலையில் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உரிய உணவு பழக்கங்கள் கடைபிடிப்பது அவசியம். அந்த வகையில், நோயெதிர்ப்பு சக்தி வலுப்படுத்தும் வேலையை டீ நன்றாக செய்யும்.
மழைக்காலத்தில் மூலிகைகளை போட்டு டீ குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்று தொற்றுக்களிலிருந்து எம்மை பாதுகாக்கும்.
அப்படியாயின் மழைக்காலங்களில் என்ன மாதிரியான டீக்களை குடிக்க வேண்டும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலங்களில் குடிக்க வேண்டிய டீ
1. அனைவரது வீட்டிலும் இஞ்சி கண்டிப்பாக இருக்கும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்பு அதிகமாக உள்ளது. இதில் மழைக்காலங்களில் டீ போட்டு குடித்தால் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும். அத்துடன் செரிமான பிரச்சினையும் சீராக இருக்கும்.
2.மருத்துவ குணமிக்க செடிகளில் ஒன்றாக துளசி பார்க்கப்படுகின்றது. ஆயுர்வேதத்தில் துளசியை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஏனெனின் துளசியில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இருக்கின்றன. இதனை டீ தயாரிக்கும் பொழுது பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அத்துடன் மன அழுத்தம், சுவாச ஆரோக்கியம் ஆகியன குணமாகும்.
3. பொதுவாக மழைக்காலங்களில் மசாலா டீயை அதிகமானவர்கள் விரும்பி குடிப்பார்கள். ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை ஒன்றாக கலந்து டீ போட்டு குடிக்கும் பொழுது நிரந்தரமான சில நோய்கள் குணமடையவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகின்றது. உதாரணமாக சளி, இருமல் இருப்பவர்கள் மசாலா டீ குடிப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |