வாழைத் தண்டில் பஜ்ஜி; மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்யுங்க
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வாழைத்தண்டினை வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைத்தண்டில் அதிகமான சத்துக்கள் உள்ள நிலையில், நிரிழிவு நோயாளிகள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
வாழைத்தண்டை கூட்டு, பொரியல், ஜுஸ் என்று வைத்து சாப்பிடும் நிலையில், தற்போது வாழைத் தண்டில் பஜ்ஜி செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையானவை
இளம் வாழைத்தண்டு வில்லைகள் – 15
உப்பு – சிறிது
பெருங்காயம் பொடி – சிறிது
ஓமம் – ¼ டீஸ்பூன்
ஊறவைத்து அரைக்க
அரிசி – 50 கிராம்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்
சிவப்பு மிளகாய் – 5
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்பு ஊற வைத்த அரிசி பருப்பை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையில் சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் இவற்றினை சேர்த்து நன்கு கலக்கவும்.
தொடர்ந்து கடாய் ஒன்றினை அடுப்பில் கடாய் ஒன்றினை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கலந்து வைத்திருக்கும் மசாலாவில், ஏற்கனவே வெட்டி தனியாக வைத்திருக்கும் வாழைத்தண்டை முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு பஜ்ஜி தயார்.