இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் இது தான்! பலரும் அறியாத தகவல்
இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தின் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் தான் டோங் என குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலமாக அருணாச்சல பிரதேசம் அறியப்படுகின்றது. அந்தவகையில், அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதலில் சூரியன் உதயமாகிறது என குறிப்பிடப்படுகின்றது.
இந்த கிராமானது இந்தியாவின் ஜப்பான் என்றும் வர்ணிக்கப்படுகின்றது. பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இங்கு அமைந்துள்ளது.

குறித்த டோங் கிராமத்தில் நாட்டின் மற்ற பகுதிகளை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்துவிடுவதுடன், ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனமும் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |