விமானத்தில் எந்த ஆசனம் மிகவும் ஆபத்து குறைந்தது?
நீங்கள் விமானத்தில் ஆசனம் ஒன்றை பதிவு செய்யும்போது ஆபத்து நேரங்களில் உங்களை பாதுகாக்குமா? என எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கின்றீர்களா? அனேகமாக அவ்வாறு செய்திருக்க மாட்டீர்கள்.
அதிக எண்ணிக்கையிலான விமான பயணிகள் ஆசனங்களை பதிவு செய்யும்போது கால்களை வசதியாக வைத்துக் கொள்வதற்கு அல்லது வசதியாக அமர்ந்து செல்வதற்கு இலகுவில் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வகையில் ஆசனங்கள் தெரிவு செய்து கொள்கின்றனர்.
அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முடிந்த அளவு முன் பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்கி கொள்கின்றனர்.
ஏனெனில் விரைவாக இறங்கிச் செல்ல முடியும் என்பதனால் இவ்வாறு ஆசனங்களை ஒதுக்கி கொள்கின்றனர். எப்பொழுதும் நாங்கள் விமானத்தின் கடைசி ஆசன வரிசையில் நடு ஆசனத்தை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்வதில்லை.
ஆனால் புள்ளி விபரங்களின் அடிப்படையில் விமானம் ஒன்றின் மிகவும் பாதுகாப்பான ஆசனமாக இந்த ஆசனம் கருதப்படுகின்றது.
விமான பயணங்கள் பாதுகாப்பானதா உலகின் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைமைகளில் ஒன்றாக விமான பயணம் போக்குவரத்து கருதப்படுகின்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் எழுவது மில்லியன் விமான பயணங்கள் பதிவாகியுள்ளன உலக அளவில் இந்த பயணங்களின் போது 287 பேர் விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்.
ஒப்பீட்டு அளவில் இது மிகவும் பாதுகாப்பான ஓர் போக்குவரத்து வழிமுறையாக கருதப்படுகின்றது. விமானம் ஒன்றில் பயணம் செய்யும்போது மரணிப்பதற்கான சாத்தியங்கள் 205582 இல் ஒன்று எனவும் காரில் பயணம் செய்யும் போது 102 இல் ஒன்று எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் ஆய்வு தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
வீதி விபத்துக்கள் குறித்த செய்திகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
ஆனால் நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற விமான விபத்து அனைத்து பத்திரிகைகளும் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தது.
விபத்துக்கள் இடம்பெறும் போது அவை தொடர்பில் மிக துல்லியமாக ஆராயப்பட்டு எதிர்காலத்தில் அவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவதனை தவிர்க்கும் வகையிலான ஆய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன உண்மையில் வணிக விமானம் ஒன்றில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை.
எனினும் நீங்கள் மிகவும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தக்கூடிய நபர் என்றால் நீங்கள் இந்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
கடந்த 35 ஆண்டுகளாக இடம்பெற்ற விமான விபத்துக்கள் தொடர்பில் ஆய்வுகளில் நடத்தப்பட்ட போது விமானத்தின் பின் இருக்கையில் நடு ஆசனங்கள் மிகவும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில் ஆபத்துக்களின் போது மிக விரைவாக வெளியேறுவதற்கு இந்த இருக்கை வசதியானது என்பதனால் இந்த இருக்கைகள் ஆபத்து குறைவாக காணப்படும் இருக்கை என்பதில் ஓர் தர்க்க ரீதியான நியாயம் காணப்படுகின்றது.
விபத்தின் தன்மையின் அடிப்படையிலேயே ஒரு விபத்தில் உயிர் பிழைப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடிகின்றது.
சில வகையான விபத்துகளின் போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
மழை உச்சி ஒன்றின் மீது விமானம் மோதுரும் போது ஏற்படக்கூடிய ஆபத்து மிகவும் அதிகமாகும் எனவும் அவசர நிலைமைகளின் போது ஓர் தட்டையான இடத்தில் விமானத்தை தரை இறக்குவதற்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானங்களில் ஏற்படக்கூடிய விபத்துக்களை வரையறுக்கும் வகையில் தற்பொழுது நிர்மாணிக்கப்படும் விமானங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விமான மாதிரிகளுக்கு ஏற்ற வகையிலும் விமான விபத்துகளின் பாதிப்புகளின் தரம் மாறுபடுகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
சில விமானங்கள் விபத்துக்குள்ளாகும் போது அதில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.