இந்த 6 நபர்களிடம் பகைப்பது உயிருக்கே ஆபத்தாகும்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எந்த நபர்களுடன் பகைப்பது மிகப்பெரும் சிக்கல்களை ஏற்பத்தும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
1. செல்வாக்கு மிக்கவர்கள்

செல்வம், அதிகாரம் மற்றும் உயர்ந்த பதவியைக் கொண்டவர்களுடன் தேவையற்ற பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
இத்தகைய செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி எந்தவொரு சூழலையும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் திறன் கொண்டவர்கள்.
அவர்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது மோதல் ஏற்பட்டால், ஈகோவுக்கு இடமளிக்காமல், புத்திசாலித்தனமாகவும் நிதானமாகவும் அதைச் சமாளிப்பதே சிறந்தது.
2. சமையல்காரர்கள்
உங்கள் உணவைத் தயாரிக்கும் நபர், உங்கள் ஆரோக்கியத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அதனால் சமையல்காரர்களுடன் நல்லுறவைப் பேணுவது அவசியம்.
பண்டைய காலங்களில் மன்னர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் சமையல்காரர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர்.
அவர்களுடன் பகை ஏற்பட்டால், அது உங்கள் நலனுக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, அவர்களிடம் மரியாதையுடனும் நட்புடனும் பழகுவது நல்லது.இவர்களிடம் பனை வளர்ப்பது உயிருக்கே ஆபத்தாகும்.

3. மருத்துவர்கள்
உங்கள் உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் பொறுப்பில் இருப்பவர் மருத்துவர். எனவே, மருத்துவருடன் பகையை வளர்த்துக் கொள்வது ஆபத்தானதாக அமையலாம்.
மருத்துவரிடம் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏதேனும் கருத்து வேறுபாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால், அவற்றை நேரடியாகப் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.மருத்துவருடனான நீண்டகால முரண்பாடு உங்கள் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
4. உங்கள் ரகசியங்களை அறிந்தவர்கள்
நமது தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் பலவீனங்களை அறிந்தவர்களை எதிரியாக மாற்றிக் கொள்வது மிகவும் ஆபத்தானது என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
இராவணனின் வீழ்ச்சிக்குக் காரணமாக, அவரது ரகசியங்களை நன்கு அறிந்த விபீஷணன் இராமரின் பக்கம் சேர்ந்ததே என்று இதிகாசங்கள் கூறுகின்றன.
அப்படி நம் ரகசியங்களை அறிந்த ஒருவர் உங்களுக்கு எதிராகத் திரும்பினால், அது உங்களுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

5. தீய குணமுடையவர்கள்
தீய குணமுடைய மனிதர்களை பாம்பு அல்லது தேளுடன் ஒப்பிடலாம். அவர்கள் எப்போது, எவ்வாறு தீங்கு விளைவிப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
அத்தகைய நபர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, அவர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிப்பதே சிறப்பு. இவர்களின் பகை பாரிய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
6. முட்டாள்கள்
முட்டாள்கள் பெரும்பாலும் விவேகத்தின் அடிப்படையில் அல்லாமல், உணர்ச்சிகளின் மற்றும் ஈகோவின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுப்பார்கள்.
அவர்களுடன் வாதாடுவதோ அல்லது அவர்களைப் புரியவைக்க முயற்சிப்பதோ பெரும்பாலும் பயனற்றதாக இருக்கும்.
அது உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும். எனவே, புத்திசாலிகள் முட்டாள்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் விலகியே இருப்பார்கள். சில சமயம் முட்டாள்களுடன் வாதாடுவது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |