சனி மகாதசை: இனி 19 வருஷத்துக்கு இந்த ராசியினருக்கு ராஜவாழ்க்கை உறுதி ... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் கிரக பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சனி பகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.
மனிதர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற வயைில் நிச்சயம் வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை கொடுத்துவிடுவார் என்பதால் சனி பெயர்ச்சி என்றாலே ஒரு விதமான பயம் ஏற்படுவது வழக்கம்.
ஜோதிட சாஸ்திரப்படி 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகாதசை தற்போது ஆரம்பமாகிறது. குறித்த விடயம் சில ராசியினருக்கு பாதக பலன்களை கொடுக்கும் அதே நேரம் சில ராசியினருக்கு ராஜ வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும்.
சனி மகாதசையால் அடுத்து வரவிருக்கும் 19 வருடங்களுக்கு அமோகமான சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சனி மகாதசையால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாழ்வில் பல வெற்றிகளை அனுபவிக்கப்போகின்றார்கள்.
இவர்களுக்கு சனியின் ஆசியால் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தன்னம்பிக்கை உயரும் இலக்குகளை அடைவதற்கு தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.
முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் உடனடி பலன்களை பெற்று மகிழ்வீர்கள். வீடு மற்றும் வாகனம் போன்ற சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்புகள் அமையும்.
தனுசு
தனுசு ராசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வீடுகளுக்கு சனிபகவான் அதிகதியாக இருப்பதால், இந்த சனி மகாதசை இவர்களுக்கு பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.
இவர்கள் வாழ்வில் ஆடம்பர வாழ்க்கை வாழக்கூடிய பொற்காலமாக இந்த காலப்பகுதி அமையப்போகின்றது.
இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு கடினமாக உழைக்கும் காலகட்டமாக இது அமையப்போகின்றது. ஆனால் அதனை அனுபவித்து மகிழ்சியடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி மகாதசை ஆரம்பம் ராஜ யோகத்தை கொடுக்கப்போகின்றது.
குடும்ப வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மகிழ்ச்சிகரமான தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்சியால் நிரம்பும்.
தொழில் மற்றும் வியாபர விடயங்களில் அசுர வளர்ச்சியை சனி பகவான் கொடுக்கப்போகின்றார். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுவிக்கும் காலகட்டமாக இரு அமையப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |