நடிகர் கோதண்டராமன் காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ள கோதண்டராமன் சென்னையில் காலமானார்.
கோதண்டராமன்
தமிழ் சினிதாவில் ஸ்டண்ட் மாஸ்டராக மற்றும் நடிகராக பணியாற்றி வந்நதவர் தான் கோதண்டராமன். 25 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
2012 ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்தின் அடியாட்களில் ஒருவராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன் பின்னர் சில சினிமாக்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் உடல் சுகயினம் காரணமாக சினிமாவில் நடிப்பது குறைத்துக்கொண்டார். இதன் பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையைில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமனுக்கு வயது 65. அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |