Vastu Tips: இந்த செடிகளில் ஒன்றை வீட்டில் நட்டால் பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்...
பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் அலங்காரத்துக்காக வீட்டில் வளர்க்கும் சில தாவரங்கள் நமது வாழ்வில் நிதி ரீதியாக பெரியளவில் தாக்கம் செலுத்துகின்றது.
தாவரங்கள் காற்றை சுத்திகரிப்பதுடன் குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வீட்டில் அடிக்கடி சிரமங்கள் ஏற்பட்டாலும் பண நஷ்டம் ஏற்பட்டாலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றி அதிலிருந்து எளிமையாக விடுப்பட முடியும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இயல்பாகவே பணத்தையும் நேர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும் சக்தி இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அப்படி பணப்பிரச்சினைகள் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுப்படுவதற்கு எந்த வகையான தாவரங்களை வீட்டில் நட வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மணி பிளாண்ட்
இந்த மணி பிளாண்ட் உற்புற தாவரங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இது நிதி வளத்தை அதிகரிக்க கூடிய ஆற்றலை அதிகம் கொண்டிருப்பதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த தாவரங்கள் வெளியிடும் காற்று வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். அதனை வீட்டில் நட்டால், கடன் தொல்லைகள் நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
துஜா
சாஸ்திரங்களின் பிரகாரம் துஜா தாவரம் சரஸ்வதியின் திருவுருவமாகவே பார்க்கப்படுகின்றது. இந்த தாவரத்தை வீட்டின் முன் நட்டால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து வீட்டில் மகிழ்சியான சூழலை உருவாகும்.
இச்செடி குழந்தைகளுக்கு கற்றல் விடயங்களில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதுடன் நிதி ரீதியிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என நம்பப்படுகின்றது.
துளசி
துளசி பணத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. அதனால் இந்துக்களின் மத்தியில் துளசி தாவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அதனால் தான் இந்து பாரம்பரியத்தில் துளசிக்கு தனி இடம் உண்டு. இந்த தாவரத்தை வீட்டில் நடுவதால் பணப்புலக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
இந்த தாவரம் வாடுவது எதிர்காலத்தில் நிதி நிலையில் ஏற்படப்போகும் பாரிய இழப்பை முன்கூட்டியே எச்சரிப்பதாகவும் கருதப்படுகின்றது.
லட்சுமி தாமரை
இந்தச் செடியை வீட்டில் நடுவது செல்வ செழிப்பை அதிகரிப்பதுடன் மன அழுத்தத்தை குறைத்து எண்ணங்களை தெளிவாக்கும்.
இந்த தாவரத்துக்கும் நேர்மறை ஆற்றலையும், பணத்தையும் ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கின்றது.
இந்தச் செடி இருக்கும் வீட்டில் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் முழுமையான ஆசீர்வாதம் இருக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |