Numerology: இந்த எண்களில் பிறந்தவரா நீங்க? அப்போ லட்சுமியின் அருளால் கோடிகளில் சம்பாதிப்பிங்க
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்துவதை போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
எண் கணணித சாஸ்திரம் தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும். இதன் பிரகாரம் எண்களால் ஒருவரை வாழ வைக்கவும் முடியும் அதே போல் வீழ்த்தவும் முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
பிறப்பு எண்களில் நவகிரகங்களின் ஆதிக்கம் காணப்படுவதை போன்று குறிப்பிட்ட சில தெய்வங்களின் ஆதிக்கமும் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே பணத்தின் கடவுளாக அறியப்படும் லட்சுமி தேவியின் முழுமையான ஆசீர்வாதம் இருக்கும். அதனால் அவர்களின் வாழ்வில் துரித முன்னேற்றமும் செல்வ செழிப்பும் நிச்சயம் அதிகரிக்கும்
அப்படி எந்தெந்த எண்களில் பிறந்தவர்கள் லட்சுமியின் அருளால் வாழ்வில் சகல செல்வங்களையும் பெறுவதுடன் கோடிகளில் சம்பாதிப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 6க்கான சிறப்பம்சங்கள்
6, 15 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மற்றும் லக்ஷ்மி தேவியின் ஆசியும் அருளும் மற்ற திகதிகளில் பிறந்தவர்களை விட சற்று அதிகமாக இருக்கும்.
சுக்கிரன் காதல், ஆடம்பரம், அழக என அனைத்து விதமான உலகத்து இன்பங்களுக்கும் அதிபதியாக திகழ்கின்றார்.
அதுபோல் லட்சுமி தேவி சகல விதமான செல்வ செழிப்பையும் வழங்கும் செல்வத்தின் கடவுளாக அறியப்படுகின்றார்.
எனவே விதி எண் 6 இல் பிறப்பெடுத்தவர்கள் அதாவது எந்த மாதமாக இருந்தாலும் 6, 15 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை மிகவும் ஆடம்பட நிறைந்ததாக இருக்குமாம். இவர்கள் வாழ்வில் எப்போதும் பண சிக்கல்களை எதிர்நோக்குது கிடையாது.
உலகத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள் இவர்களுக்கு தானாகவே அமையும். அதிக உடல் உழைப்பை பயன்படுத்தாமலேயே இவர்கள் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.
மேலும் சுக்கிரனின் ஆதிக்கமும் இந்த எண்காரர்களுக்கு இருப்பதால், மற்றவர்களை முதல் பார்வையிலேயே கவரக்கூடிய அளவுக்கு வசீகரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திற்கு ஒவ்வொரு விதமான பெரிய முன்னேற்றம் கொண்டதாக இருக்கும்.
இவர்கள் லட்சுமி தேவியின் பரிபூரண அருளால் இளம் வயதிலேயே கோடிக்கணக்கான பணத்தை அசால்ட்டாக சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் வாழ்வில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவது என்பது மிகவும் அரிது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |