கடினமாக உழைத்தாலும் தோல்வியை சந்திக்கும் 3 நட்சத்திரத்தினர்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நபரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்ககையுடன் மிகவும் நெருங்கிய வகையில் தொடர்பு கொண்டுள்ளது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நச்சத்திரங்களில் பிறப்பெடுத்த ஆண்களும் சரி, பெண்களும் சரி எவ்வளவு கடின உழைப்பை வழங்கினாலும் பெரும்பாலும் தோல்வியையே வாழ்வில் அதிகம் சந்திப்பார்களாம்.
வெற்றியை நோக்கி பாடுபட்டும் தோல்வியையே அதிகமாக தழுவும் துரதிஷ்டம் கொண்ட நட்சத்திரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் வசீகர தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்த விடயத்தையும் மிகுந்த ஆறுவத்துடன், தங்களின் ஒட்டுமொத்த முயற்சியையும் வழங்கி செய்ய வேண்டும் என்ற குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மிகவும் நேர்மையான வழியில் வெற்றியடைய வேண்டும் என நினைக்கும் இவர்கள் பெரும்பாலாக சந்தர்பங்களில் இவர்களின் குணத்தால் தோல்வியடைய நேரிடலாம்.
மூலம்
27 நட்சத்திரங்களில் 19 ஆவது நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும் தைரியசாலிகளாக இருப்பார்கள்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவும், இயற்கை பிரியர்களாகவும் இருக்கும் இவர்கள் இலக்கை அடைய வேண்டும் என கடின உழைப்பை மேற்கொள்வார்கள்.
இருப்பினும் இவர்களிடமிருக்கும் சிறிய குறைபாடுகளால் தோல்வியடைய அதிக வாய்ப்பு காணப்படும்.
கார்த்திகை
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலுவான ஆளுமையைக் கொண்டவர்களாகவும் சிறந்த கல்வியறிவுடையவர்களாகவும் இருப்பார்கள்.
கலை துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் அதில் சாதிக்க வேண்டும் என வாழ்க்கை முழுவதும் போராடிக்கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் அடிக்கடி நிதி ரீதியில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |