இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசியை போலவே பிறப்பு நட்சத்திரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவமான குணங்களின் நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறப்பெடுத்தவர்கள் இயல்பாகவே நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் கடினமான சூழ்நிலைகளிலும் உண்மையை பேசுபவர்களாக இருப்பார்கள்.
அப்படி பொய் என்ற நாமமே அறியாதவர்கள் எந்தெந்த நட்சத்திரத்தினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கிருத்திகை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாகம் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களின் மனதில் பட்டதை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். ஆபத்தான நிலையிலும் கூட உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
பூரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தலைமைத்துவ குணங்களை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் நேர்மை பெரும்பாலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை உணர்வுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும்.
அவர்கள் உண்மையாக வாழவேண்டும் என்பதை வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக கொண்டிருப்பார்கள்.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விடயங்களிலும் முழுமைத்தன்மையும் உண்மையும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் தெளிவாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் ஆற்றல் இருக்கும். இவர்கள் கொள்கைகளை பின்பற்றுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் கொள்கை பட்டியலில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பது நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
