இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ டிசம்பர் மாதம் பொற்காலமாக இருக்கப்போகுது
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
ஜோதிட நிபுணர்களின் கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் செவ்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
சிறப்பு பூஜைகள், தியானம், வழிபாடு என தெய்வீக தன்மை பொருந்திய மார்கழி மாதத்தில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமோக பலன்களை பெறப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சித்திரை நட்சத்திரம்
இந்த மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைக்கும்.
சுவாதி நட்சத்திரம்
இந்த மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள்.
வேலை மாற்றம், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
திருமண வாழ்வில் இதுவரையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவுகளிடைய ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்வில் இந்த மாதம் ஒரு பொற்காலமாக அமையப்போகின்றது.
நீண்ட நாள் பிராத்தனைகள் இந்த மாதத்தில் நிறைவேறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவு பிறக்கும்.
புதிய முயற்சிகள் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பணவரவு அமோகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |