இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தவறியும் பகைக்காதீங்க... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துவதுடன், எதிர்கால வாழ்க்ககையையையும் நிர்ணயம் செய்கிறது என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே பழிவாங்கும் குணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் மிருகத்தை விடவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்களாம் அப்படிப்பட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிருகசீரிஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக கோப உணர்வு மற்றும் பழிவாங்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே மிகவும் நேர்மையானர்களாக இருப்பார்கள்.இதனால் இவர்களுக்கு தீங்கு செய்பவர்கள் மீது இவர்கள் தீராத பகை உணர்வை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
இவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் செய்த தவறுக்காக வருந்தும்படி கொஞ்சமும் இரக்கமின்றி பழிவாங்குவார்கள்.இவர்களின் கோபம் நெருப்பை விடவும் கொடுமையாக இருக்கும்.
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் கூடிய கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் இருப்பார்கள்.
இவர்களுக்கு துரோகம் செய்தால், இவர்களை பழிவாங்கும் வரை அவர்களால் நிம்மதியாக வாழவே முடியாது.
இவர்கள் யாரையும் உடல் ரீதியாக காயப்படுத்த மாட்டார்கள், ஆனால் மனரீதியாக மீண்டு வர முடியாத அளவிற்கு துன்பத்தை கொடுத்துவிடுவார்கள்.
விசாகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துரோகிகளை இரக்கமின்றி பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அடிப்படையில் மிகவும் நல்ல குணம் கொண்டவர்களாகவும் சாந்தமான முகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு தீங்கு செய்தால் அவர்களை அழிக்கும் வரையில் ஓய மாட்டார்கள்.
இவர்கள் மனதளவில் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பழிவாங்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
