இந்த மாதம் பிறந்தவங்க யாராலும் தொட முடியாத அளவுக்கு உயர்வார்களாம்.. உங்களுக்கு முடியுமா?
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த ராசியும், நட்சத்திரமும் எப்படி முக்கியமானதோ அதே அளவுக்கு அவர்கள் பிறந்த மாதம், நாள், கிழமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொருவரும் பிறந்த மாதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சிலர்கள் அவர்கள் பிறந்த மாதங்களில் அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது கவர்ச்சியாகவும், சிறந்த தலைவர்களாகவும் இருப்பார்களாம்.
அத்துடன் அவர்களின் உள்ளார்ந்த திறமை அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், எமது சமூகத்தில் செல்வாக்கு செழிப்பு மிக்கவர்களாக இருக்கும் தலைவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் காணலாம்.
ஜனவரி | ஆண்டின் முதல் மாதம் பிறந்தவர்கள் அனைத்திலும் முதலிடத்தில் இருக்க விரும்புவார்கள். இந்த குணம் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். அப்பாவியாக இருக்கிறார்கள் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் தைரியமானவர்களாக இருப்பார்கள். மனவலிமைக் கொண்டவர்களாக இருப்பதால் பொறுப்பு மற்றும் ஒழுக்கம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை விட திறமைக்கும், உழைப்பிற்கும் மரியாதை கொடுக்கிறார்கள். கடினமான உழைப்பு அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும். |
அக்டோபர் | அக்டோபர் மாதம் பிறந்தவர்கள், சக்திவாய்ந்த செல்வாக்கை வெளிப்படுத்தும் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இலட்சியத்தை நோக்கிய பயணம் இருக்கும். புத்திக்கூர்மை மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டிருப்பதால் ஆழமான உண்மைகளை கண்டறியும் ஆற்றல் இருக்கும். வாழ்வின் நோக்கத்தையும், திறமையையும் மறைக்கும் ரகசியமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அமைதியாக இருக்கும்போது கூட அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன. |
டிசம்பர் | டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் மாற்றத்தையும், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையும் கண்டு பயம் கொள்ளாமல் தைரியமாக முன்னோக்கிச் செல்வார்கள். வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முன்னோக்கிச் செல்ல புதிய பாதையை கண்டுபிடித்து அதன்படி, செயற்படுவார்கள். இயற்கையான நெகிழ்வுத்தன்மையையும், வலிமையையும் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறமை இருக்கும். இது சமூகத்தில் முக்கியமானவர்களாக மாற்றும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).