காதலுக்காக உயிரையே கொடுக்கும் நபர்கள் பிறந்த மாதம் எது? துணையாக கிடைப்பதே வரமாம்
ஜோதிட சாஸ்த்திரன்படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்களை காதலித்து திருமணம் செய்வது வரம் என சொல்லப்படுகிறது. ஏனெனின் இவர்கள், அவர்களுடைய துணைக்கு துரோகம் செய்யாமல் நேர்மையாக இருப்பார்கள்.
அத்துடன் காதலுக்காக எதையும் செய்யும் துணிச்சல் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரிடமும் நேர்மை மற்றும் அன்பு இருக்க வேண்டிய குணங்கள். ஆனால் தற்போது மாறி வரும் கலியுகத்தில் நேர்மை என்ற வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியாமல் போய் விட்டது.
அப்படியாயின், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களை திருமணம் செய்தால் ஒருபோதும் துரோகம் நடக்காது என எண்கணிதம் கூறுகிறது.
அந்த வகையில், தன்னுடைய உயிரையே கொடுக்கும் நபர்கள் பிறந்த மாதங்கள் என்னென்ன? அவர்களை காணப்படும் குணங்கள் என்னென்ன என்பதை பதிவில் காணலாம்.
நேர்மையானவர்கள் பிறந்த மாதங்கள்
பிப்ரவரி | பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் சுதந்திரமான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய அனுபவங்களை எப்போதும் தேடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் காதல் உணர்வு அதிகமாக கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களின் துணைக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடைய துணைக்கு ஆதரவாக இருப்பதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள் இருக்கும் சுதந்திரமான குணம் அவர்களின் துணைக்கும் அதை வழங்கும். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் மற்றவர்களை விட ஆளுமை திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் மற்றவர்களை கவரும் அளவுக்கு நல்ல குணங்கள் இருக்கும். தன்னுடைய துணைக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள உறுதியை உடைத்து யாராலும் உறவை முடித்துக் கொள்ளவே முடியாது. புதிய நண்பர்களுடன் நட்பு வைத்துக் கொள்ள விருப்பம் காட்டுவார்கள். மற்றவர்கள் சில சமயங்களில் இவருடைய நேர்மையை சோதித்து பார்க்கலாம். |
ஜூலை | ஜூலை மாதம் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள உற்சாகம் மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். சில சமயங்களில் உறவுகளுக்குள் தகராறுகள் வரலாம். தன்னுடைய துணைக்கு எப்போதும் நேர்மையாக இருக்கும் இவர்களை காதலிப்பவர்கள் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).