வன்முறையாளர்கள் பிறந்த மாதம் எது தெரியுமா? இவர்களுக்கு வாயை விட கை அதிகமாக பேசுமாம்
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கு ஒரு தனித்துவமான நடத்தை மற்றும் குணங்கள் இருக்கும்.
இவை குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களின் வளர்ப்பு, குடும்பச்சூழல் மற்றும் நட்பு வட்டாரம் போன்றவற்றில் தாக்கம் செலுத்துகின்றது.
இருப்பினும் ஒருவரின் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் பிறந்த மாதம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து ஆளுமை மற்றும் பண்புகளை நிர்ணயிக்கக்கூடும்.
ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட ஆக்ரோஷமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பேசி ஒரு விடயத்தை தீர்க்க மனம் இருக்காது.
அந்த வகையில், அதிகப்படியான கோபத்துடன் நடந்து கொள்பவர்கள் பிறந்த மாதம் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
மார்ச் | மார்ச் மாதம் பிறந்தவர்கள் சண்டையிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அச்சமற்றவர்களாக இருந்து மற்றவர்களை நேருக்கு நேர் மோதுவார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் துளியும் மற்றவர்களிடம் பயம் கொள்வது போன்று காட்டிக் கொள்ளமாட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், சிறிய பிரச்சினைகளுக்குக் கூட பெரிதாக நினைப்பார்கள். ஆக்ரோஷமான மனநிலையில் இருக்கும் இவர்களை அமைதிப்படுத்துவது கடினம். மனதிற்குள் வெறுப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அடிக்கடி கோபப்படுவார்கள். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் மனஉறுதி இருந்தாலும் அடிக்கடி கோபம் கொள்வார்கள். இவர்களிடம் உள்ள ஆக்ரோஷம் பிடிவாதமாக மாறலாம். சிலசமயங்களில் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள், அவர்கள் காளைகளை போன்ற மூர்க்கத்தனம் கொண்டவர்களாக சமூகத்தில் பார்க்கப்படுவார்கள். நீண்ட கால பகையை மனதில் வைத்து கொண்டு, சந்தர்ப்பம் வரும் பொழுது எல்லாம் தூண்டப்படுவார்கள். கோபம் படிப்படியாக வளர்ந்தாலும், அவர்கள் பொறுமையை இழக்கும்போது அது கடுமையானதாகவும், பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். |
நவம்பர் | நவம்பர் மாதம் பிறந்தவர்கள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். லட்சியவாதிகளாக இருக்கும் இவர்களிடம் யாராவது குறுக்கிடும் போது மூர்கமானவர்களாக இருப்பார்கள். சிலர் தங்களிடம் உள்ள அதிகாரத்தின் பலத்தை தவறாக பயன்படுத்தலாம். வன்முறையில் ஈடுபடாவிட்டாலும், எதிரில் இருப்பவர்கள் எழ முடியாத அளவுக்கு செயல்களால் காயப்படுத்துவார்கள். ஒருவரை பழிவாங்கும் போது அவர்கள் கடினமாகவும், சமரசமற்றவர்களாகவும், வலிமையையும் கட்டுப்பாட்டையும் பயன்படுத்தி தன்னிடம் உள்ள கோபத்தை தீர்த்து கொள்வார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).