இந்த ராசி ஆண்கள் பொய் சொல்வதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் இவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்ககளின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் உண்மை போல் பொய் சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்களாம்.
அப்படி சொல்லும் பொய்யை யாரும் பொய் என நினைக்க முடியாதளவுக்கு நேர்த்தியாக பொய் சொல்லும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் உணர்வுகளை எப்போதும் மர்மமாகவே வைத்திருப்பார்கள்.
அவர்களின் மனம் ஒருநிலையில் இருக்காது இவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மை போல் தோன்றினாலும் அவை பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை.
இவர்கள் பேசுவதில் உண்மை எது, பொய் எது என வேறுப்படுத்தவே முடியாத அளவுக்கு அவர்களின் பேச்சாற்றல் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் ஆசைகளை எப்போதும் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில் அதிகமாக பொய் சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் பொய்கள் நேர்தியானவைகளாக இருக்கும். யாராலும் கண்டுப்பிடிக்கவும் முடியாது.
இவர்கள் எந்த கடினமான சூழ்நிலையையும் அசால்ட்டாக கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் சுரந்திரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
அவர்கள் பொறுப்புக்களையும் கடமைகளையும் ஒருபோதும் விரும்புவது கிடையாது.அவற்றில் இருந்து தப்பிக்க எந்த பொய்யையும் சொல்ல தயாராக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் புகழை எடுத்துரைப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் அடிக்கடி பொய் சொல்லும் குணத்தை கொணடடிருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |