Astrology: இந்த எழுத்துக்களில் பெயர் உள்ள பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்
நம்மிள் சிலர் பிறக்கும் பொழுதே அதிர்ஷ்டசாலியாக பிறக்கிறார்கள்.
ஜோதிடத்தின் மூலம் ஒருவரின் இயல்பு, ஆளுமை, எதிர்காலம் அனைத்தையும் கணிக்க முடியும். அவர்களின் கைரேகை, ஜாதகம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு, அவர்கள் வளர்ந்து என்ன செய்ய போகிறார்கள் என்பதையும் அறியலாம்.
மாறாக பெயர்களில் ஆரம்பிக்கும் முதல் எழுத்துக்களை வைத்தும் சில விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், சினிமா பிரபலங்கள் அவர்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கான சினிமாவுக்குள் வந்தவுடன் அவர்களின் உண்மையான பெயர்களை மறைத்து வேறு பெயரால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதுவும் அவர்களின் வெற்றிக்கு ஒருவழியாகவும் இருக்கலாம்.
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்களாம். அப்படியாயின், என்னென்ன எழுத்துக்களில் பெயர் கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
முதல் எழுத்து D | பெயரின் முதல் எழுத்து D என தொடங்கினால் அந்த எழுத்தில் பெயர் கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களுடைய இயல்புகள் நன்றாக இருக்கும். அதே சமயம், மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருப்பார்கள். எப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள். |
முதல் எழுத்து G | G என்ற எழுத்தில் பெயர் துவங்கும் பெண்கள், அவர்கள் விரும்பும் அனைத்தையும் சாதிப்பவர்களாக இருப்பார்கள். நிறைய பணம் இவர்களிடம் இருப்பதால் ஏழைகளுக்கு உதவிச் செய்வார்கள். ஏழை வீட்டில் திருமணம் செய்தாலும் செல்லும் வீடுக்கு அதிர்ஷ்டத்தை தேடிக் கொடுப்பார்கள். மாமியாரை நன்றாக பார்த்துக் கொள்ளும் மருமகளாக இருப்பார்கள். |
முதல் எழுத்து J | பெயரின் முதல் எழுத்து J என ஆரம்பிக்கும் பெண்கள் மற்றவர்களுடன் நட்பாக பழகுவார்களாம். அனைவரின் இதயங்களை வெல்லும் நபராக இருப்பதால் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறார்கள். |
முதல் எழுத்து S | S-ல் தொடங்கும் பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எப்போதும் பெரிய இலட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள். தொழிலில் உயர் பதவியை பெறுவார்கள். நிறைய பணம், தைரியம் மற்றும் மரியாதையும் கிடைக்கும். |
முதல் எழுத்து V | V என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள் மிக அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள கடின உழைப்பு, பொறுமை, சிந்தனையுடன் முடிவெடுப்பது போன்ற குணங்களை கொண்டவர்கள் இவர்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |