இந்தப் பொருட்களையெல்லாம் உடனே சமையலறையில் இருந்து தூக்கி வீசுங்க! இல்லை ஆபத்து?
ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் தான் வீட்டின் உள்ளோரின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக உள்ளது.
அப்படிப்பட்ட சமையலறையில் நாம் உபயோகிக்கும் சில பொருட்கள் நம்முடைய சமையலை எளிதாக்கினாலும், அதனால் சில ஆரோக்கிய குறைபாட்டுகளையும் உங்களுக்கு ஏற்படுத்தும்.
பல வருடங்களாக நீங்கள் உபயோகித்த சில பொருட்களை தூக்கி எறியாமல், அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உங்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம், அல்லது மோசமான பிரச்சனையை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க.
க்ரில் கம்பியை சுத்தம் செய்யும் பிரஷ்கள்
க்ரில் கம்பியில் சமைத்து முடித்தவுடன், அதனை எப்போதும் சுத்தம் செய்வது நல்ல விஷயம் தான். ஆனால், அதனைத் தொடர்ந்து பல காலங்களாக நீங்கள் பயன்படுத்தி வருகிறீர் என்றால், இது உங்களுக்காகத் தான்.
பலமுறை பயன்படுத்திய பிரஷை நீங்கள் இன்னும் பயன்படுத்துகிறீர்கள் எனில், அதைத் தூக்கி எறிய வேண்டிய நேரம் இது. இது போன்ற பிரஷ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன.
கீறல் விழுந்த நான்ஸ்டிக் பான்கள்
சமையல் அறையில் வேலை செய்யும் பலருக்கும் பிடித்த பாத்திரம் என்னவென்றால் நான்ஸ்டிக்கால் ஆன பாத்திரங்கள் தான். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கீறல் விழுந்து இருந்தாலும், அதனை நாம் பயன்படுத்துவோம்.
வாங்கிய புதிதில் பளபளவென இருக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள், காலப்போக்கில் நிறம் மாறி, கீறல் விழும். பல வருடங்கள் இதுபோன்ற கீறல் விழுந்த பாத்திரத்தை நாம் பயன்படுத்தும் போது, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உங்களின் உணவில் அவை கசியக்கூடும்.
பெரும்பாலான நிபுணர்கள் தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவை என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். நான்ஸ்டிக் பாத்திரத்தில் நீங்கள் சமைக்கும் உணவுகள் அதிக அளவில் ஒட்டினால், அந்த பாத்திரத்தை மாற்றிவிட்டு, புதிய பாத்திரத்துக்கு மாற வேண்டும் என்பதன் அறிகுறி தான் அது.
பிளாஸ்டிக் கண்டெய்னர்ஸ் மற்றும் பாத்திரங்கள்
பிளாஸ்டிக் கரண்டிகள், பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள் சுத்தம் செய்ய எளிதானது தான் என்றாலும், இதில் பல ஆபத்துகள் நிறைந்து உள்ளன. பிளாஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் நச்சுகள் உங்களின் உணவு மற்றும் உணவுப் பொருட்களில் கசியச் செய்யும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பது பற்றிய ஒரு ஆய்வில், பிளாஸ்டிக் பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்தும் போது, 70 டிகிரி செல்சியஸில் அதில் இருந்து நச்சுப் பொருட்கள் உருவாகத் தொடங்கும். மேலும், அதிக வெப்ப நிலைக்கு அவை உள்ளாகும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுகள் முழுவதும் உங்களின் உணவில் முழுமையாக சேர்ந்து விடும்.
அதிக நாட்களாக பிளாஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, கல்லீரல் மற்றும் தைராய்டு நோய்கள், கருவுறாமை, அதிக கொழுப்பு மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதில், மரம் அல்லது உலோகத்தால் ஆன சமையல் பாத்திரங்களுக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பாத்திரங்களைப் போலவே, பிளாஸ்டிக் கண்டெய்னர்களும் உணவை சேமிக்க சிறந்த பொருட்கள் அல்ல. பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் பிஸ்பெனோல் ஏ என்ற வேதிப்பொருள் உள்ளது.
இதனை நீங்கள் நீண்ட நாட்களாக உபயோகித்தால், அவை உங்களின் உணவுப் பொருட்களிலும் ஊருடுவி, உணவின் தன்மையை மாற்றும். பிளாஸ்டிக் கண்டெய்னர்களுக்கு பதிலாக கண்ணாடி கண்டெய்னர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
பழைய பேக்கிங் தாள்கள்
உங்கள் சமையலறையில் எப்போதும் வைத்து இருக்கும் வெள்ளி நிறத்தால் ஆன, பேக்கிங் தாள்கள், காலப்போக்கில் அதன் நிறத்தை இழந்து, புதிய தோற்றத்தை பெறலாம்.
அதில், நீங்கள் வறுத்த அல்லது சூடான உணவுகளை வைக்கும்போது, அதன் மீது வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு, உங்களின் உணவை மாற்றும். மேலும், பேக்கிங் தாளில் சேர்க்கப்படும் இரும்பு, உங்கள் ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்காது. ஆனால், அவை ஆபத்தானது தான்.