உலகில் ரெயின்போ நீர்வீழ்ச்சி எது தெரியுமா?
உலகில் நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக பார்ப்படுகின்றது. அந்த வகையில் ரெயின்போ நீர்விழ்ச்சி பற்றி பார்க்கலாம்.
ரெயின்போ நீர்வீழ்ச்சி
உலகில் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவை அவற்றின் ஏதோ ஒரு பண்பிற்காக பிரசித்தி பெற்று வருகின்றது. ஆனால் சில நீர்வீழ்ச்சிகள் வற்றை தனித்துவமாக காட்டும் இயற்கையான விஷயங்கள் நிறைய தன்னுள் வைத்துள்ளது.
அத்தகைய இடங்களில் ஒன்றாக திகழுவது ரெயின்போ நீர்வீழ்ச்சி.
இங்கு சூரிய ஒளியும் நீர்த்தூறலும் இணைந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு காலையிலும் வண்ணங்கள் நிரம்பிய ஒரு அழகான வானவிலை உருவாக்குகின்றன. இந்த இயற்கை நிகழ்வு காரணமாக பலர் இங்கு ஈர்க்கப்படுகின்றனர்.

அமைவிடம்
ரெயின்போ நீர்வீழ்ச்சி, அமெரிக்காவின் ஹவாய் தீவின் பெரிய தீவில் உள்ள ஹிலோ அருகே அமைந்துள்ளது. அங்கே வெயில் வரும் காலங்களில் அதன் மூடுபனியில் இயற்கையான வானவில் உருவாகிறது.
இங்கு செல்ஃபி எடுப்பதற்காகவே சிலர் வருகை தருவார்கள். வைலுகு நதியிலிருந்து சுமார் 80 அடி உயரத்தில் விழும் இந்த நீர்வீழ்ச்சி, சூரிய ஒளியும் தண்ணீரும் சந்திக்கும் இடத்தில் ஒரு பிரகாசமான தெறிப்பை உருவாக்கி ரெயின்போ காட்சி தரும்.

விழும் நீரால் உருவாக்கப்பட்ட மூடுபனியில் வானவில் இயற்கையாகவே தோன்றுவதால் இந்த நீர்வீழ்ச்சி ரெயின்போ நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
சூரிய ஒளி சரியான கோணத்தில் மூடுபனியைத் தாக்கும் போது, ஒரு தெளிவான, வண்ணமயமான வளைவு உருவாகிறது.
குறிப்பாக அதிகாலையில். இந்த வழக்கமான வானவில் உருவாக்கம்தான் அதன் பிரபலமான பெயருக்கும் உலகளாவிய புகழுக்கும் காரணம். இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 80 அடியாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |