உயிரை பறிக்கும் பாத்திரங்கள் எது தெரியுமா? இனி இதுல சமைத்து சாப்பிடாதீங்க....ஆபத்து
நம்முடைய முன்னோர்கள் செம்பு, பித்தளை பாத்திரங்களை சமைக்க பயன்படுத்தினார்கள்.
பிறகு எவர்சில்வர், அலுமினியம் பயன்பாடுகள் புழக்கத்துக்கு வந்தது.
அதன் பிறகு நான்ஸ்டிக் ரொம்ப நேரம் சூடா இருக்க இரும்பு சட்டி, சாதம் வடிக்க அலுமினியம் என்று வகைப்படுத்தி தனித்தனியாக சமைக்கிறோம். தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு அடுத்தபடியாக செராமிக் பாத்திரங்களும் வந்துள்ளது.
எதில் சமைத்தால் என்ன மாதிரியான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. எது ஆபத்தை ஏற்படுத்துகின்றது என்று பார்க்கலாம்.
வெண்கல பாத்திரங்கள் - வெண்கலத்தில் சமைப்பதால் உடல் சோர்வுகள் நீங்கும். இதில் சமைக்கும் உணவுகள் வயிற்றுக்கு பிரச்சனை தராது. ஃபுட் பாய்ஸன் என்ற ஒரு பிரச்சனை எட்டி கூட பார்க்காது.
செம்பு பாத்திரம் - செம்பு பாத்திரத்தில் சமைக்கும் போது உணவு நீண்ட நேரம் மிதமான சூட்டில் பயன்படுத்துவதால் உணவின் தன்மை மாறுவதில்லை. மூட்டு வலி, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகாது. செம்பு பாத்திரத்தில் சமையல் செய்து சாப்பிடுபவர்களுக்கு அடிபட்டாலும் காயம் விரைவில் ஆறும் திறன் உண்டு.
இரும்பு பாத்திரம் - இரும்பு பாத்திரங்களில் வெப்பம் சீராக பரவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து உணவோடு கலந்து உடலில் ரத்த சோகை இல்லாமல் செய்யும். இரும்பு, ஜிங்க், தாமிரம் போன்றவை நம் உடலுக்கு தேவையான சத்துகள்.
அலுமினியம் - எல்லா நாட்களிலும் அதிக வெப்பத்தோடு இதில் சமைக்கும் போது இந்த பாத்திரத்திலிருந்து கருப்பு வெளியேறினால் மட்டும் தான் ஆபத்து அதனால் பதமாக சமைத்து வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது. இதில் டீ போடுவதோ, உப்பு சேர்த்து சமைக்கும் போதும் அதில் இருக்கும் அமிலமும் அலுமினியமும் வினைபுரிந்து உணவின் சத்துகளை இழக்க செய்யும்.
சில்வர் பாத்திரம் - நிக்கல், குரோமியம் போன்ற வேதிப்பொருள்கள் சில்வர் பாத்தில் கலந்திருக்கின்றது. இவை அதிக பாதிப்பு உண்டாக்குவதில்லை. அதே போல எவ்வித நன்மையும் இல்லை.
நான்ஸ்டிக் பாத்திரம்
இதில் புற்றுநோய் அபாயம் கொண்ட டெஃப்ளான்,PFOA ( Perfluorooctanoic acid) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளது. உயிருக்கு மறைமுக ஆபத்தை கொடுக்கும். இவை பாதுகாப்பாக பாத்திரத்திலேயே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் அதிக நேரம் அதிக வெப்பத்தில் சமைக்கும் போது இதிலிருக்கும் நச்சு வெளியேறுகிறது. அதனால் சமைக்கும் போது கூடுதல் கவனமெடுத்து மிதமான தீயில் சமையுங்கள்.