இரண்டு முறை பல்துலக்கியும் வாய் துர்நாற்றமா? காரணத்தை விளக்கும் மருத்துவர்
பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கும் பொதுவான சுகாதார பிரச்சனைகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது என்றால், அது நிச்சயம் வாய் துர்நாற்றம் (bad breath) ஆகத்தான் இருக்கும்.
இந்த பிரச்சனை, பிறரிடம் பேசத் தயக்கத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் குறைக்கும் நிலையை உருவாக்குகிறது.

சிலர் தினசரி இரண்டு முறை நன்றாக பல்துலக்கிய பின்னரும் கூட இந்த பிரச்சினை இருப்பதாக குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு பல்துலக்கியும் வாய் துர்நாற்றம் வீசும் பிரச்சினை இருகின்றது என்றால், பிரச்சியை உங்கள் வாயில் இல்லை குடல் சார்ந்த பிரச்சினைகளின் விளைவாகக்கூட இருக்கலாம்.
குறிப்பாக தவறான உணவுப் பழக்கங்கள் வெங்காயம், பூண்டு, காரமாக அதிகமாக சாப்பிடுவது, மது, மற்றும் சிகரெட் போன்று சில பழக்கங்கள் கூட வாய் துர்நாற்றத்தை தூண்டக்கூடும். மேலும் வயிற்றுப் பிரச்சனைகள் அமிலத்தன்மை, வாயு, மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் ஆகியவையும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாக அறியப்படுகின்றது.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணரான நமாமி அகர்வால் வாய் துர்நாற்றத்திற்கும், குடல் பிரச்சனைக்கும் இடையிலான தொடர்பு பற்றி தனது சமூக வலைத்தளபக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளதுடன், அதற்கான வீட்டு வைத்தியங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.
எளிமையான வீட்டு வைத்தியங்கள்

அவர் குறிப்பிடுகையில், இஞ்சியில் ஜிஞ்செரோல் அதிகளவில் இருப்பதால், இது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் குடலியக்கத்தையும் ஆதரிக்கிறது.அதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைகின்றது என குறிப்பிடுகின்றார்.

இரண்டாவதாக அவர் கூறியது சீரகம் . இந்த விதைகளில் அனெத்தோல் எனப்படும் ஒரு சேர்மம் காணப்படுவதால், இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதுடள் குடல் வாயுவை குறைக்க உதவுகிறது மற்றும் சல்பர் சேர்மங்களால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தடுப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது என குறிப்பிடுகின்றார்.
எனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று போராடுபவர்கள் ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பின்னரும் சிறிது சோம்பு விதைகளை வாயில் போட்டு மெல்லும் வழக்கத்தைக் பின்பற்றினாலே போதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புதினாவில் மெந்தால் உள்ளது மற்றும் இதில் இயற்கையான ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது.
இது வாய் மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதுபோல் கிராம்பு ஒரு வலுவான ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டுள்ளது.

இந்த கிராம்பு துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது. அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் வாய் துர்நாற்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |