இந்த உணவுகளை சாப்பிடும் போது மிகவும் கவனம்... பல பிரச்சனையை ஏற்படுத்துமாம்
நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளால் எந்தெந்த உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியம்
பொதுவாக உடல் ஆரோக்கியம் என்பது நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் தான் இருக்கின்றது. ஆம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது.

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவில் உள்ளது. அதுவே சில உணவுகள் வாய்க்கு ருசியாக இருக்கின்றது என்று சாப்பிட்டு வரும் நாம் இதனால் ஏற்படும் பிரச்சனையை கருத்தில் கொள்வதில்லை.
அந்த வகையில் எந்தெந்த உணவுகள் எடுத்துக் கொண்டால், எந்தெந்த உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உணவும், உடல் உறுப்பும்
உடம்பில் முக்கிய உறுப்பாக இருக்கும் கல்லீரல் ஆல்கஹால் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது முதலாவதாக இந்த உறுப்பே பாதிக்கப்படுகின்றது.
அதிகப்படியான எண்ணெய் உணவுகள், ஃபாஸ்ட் புட், பொரித்த உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இவற்றினை சாப்பிடுவதால் இதயம் கடுமையாக பாதிக்கப்படும்.
அதே போன்று அதிகப்படியான சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை நாம் எடுத்துக் கொண்டால் மூளை பாதிக்கப்படுமாம்.

image: shutterstock
மேலும் உணவில் அதிகப்படியான உப்பை சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுமாம்.
பால், பால் பொருட்களான சீஸ், வெண்ணெய் இவற்றினை அதிகமாக சாப்பிட்டால் சருமத்தில் பருக்கள் ஏற்படும்.
கார்பனேட் பானங்கள், கூல் ட்ரிங்ஸ் இவற்றினை அதிகமாக எடுத்துக் கொண்டால் கணையம் நேரடியாக பாதிக்கப்படும்.
அதிகளவிலான ஆல்கஹால், புகைபிடிப்பது மற்றும் எண்ணெய் உணவுகள் இவற்றினை அதிகமாக எடுத்துக் கொண்டால் நுரையீரல் பாதிக்கப்படும்.

image: istock
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |