கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தணுமா? இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்
மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரல் ஆகும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும்.
கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும்.
இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல் உதவுகிறது.
தற்காலத்தில் துரித உணவுகளை உட்கொள்ளும் அளவு அதிகரித்தமை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் ஆகியன காரணமாக கல்லீரல் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் அதிகமானோர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நீங்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
மஞ்சள் சமையலின் போது மசாலாப் பொருளாக நாம் பயன்படுத்தும் மஞ்சள் அளப்பரிய மருத்துவ குணங்கழள கொண்டுள்ளது.
இதில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் கல்லீரலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் உடலில் காணப்படும் நச்சுக்களை நீக்குவதற்கும் உதவுகின்றது.
பூண்டில் அதிகமாக சல்பர் சேர்மங்கள் காணப்படுகின்றது. அவை கல்லீரலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். கல்லீரலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி அதன் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பூண்டு முக்கியத்துவம் பெருகின்றது.
முழு தானியங்கள் கல்லீரலின் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
இதில் காணப்படும் வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் கல்லீரலை சுத்தப்படுத்த துணைப்புரிகின்றன.
கொதுவாகவே பழங்கள் கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுவதில் சிறப்பாக பங்காற்றுகின்றன.
மேலும் உலர் பழங்கள்,பாதாம், வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி விதைகளில் ஆகியவற்றில் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுகின்றது. ஆய்வுகளின் அடிப்படையில் கல்லீரல் ஆரோக்கியத்தில் வைட்டமின் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அக்ரூட் பருப்பில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் குளுதாதயோன் போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்தி அதனை புதுபிக்கும் தொழிலை செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |