தூக்கமின்மை பிரச்சினைக்கு வாழைப்பழம் தீர்வு கொடுக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுதுகின்றது.
நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மிகை சிந்தனை காரணமாகவும் சிலருக்கு கெட்ட கனவுகள் காரணமாகவும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாகவும் இரவில் சரியான தூக்கம் வருவதில்லை.
படுக்கையில் படுத்ததும் சில நிமிடங்களில் தூங்குவதெல்லாம் சிலர் வாங்கி வந்த வரம் என்றும் சொல்லுமளவிற்கு தூக்கமின்மை பிரச்சனை உலகம் முழுவதும் வியாபித்து காணப்படுகின்றது.
நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க தூக்கம் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தினசரி இரவு போதுமான நேரம் தூங்குவது மிக அவசியமாகின்றது.
அந்த வகையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வு கொடுக்கும் என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது தொடர்பான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழம் தீர்வு கொடுக்குமா?
வாழைப்பழங்களில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் நன்றாக தூங்க உதவும். வாழைப்பழங்களில் காணப்படும் மேற்கண்ட 2 மினரல்ஸ்களும் தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.
அதே போல வாழைப்பழங்களில் உள்ள tryptophan என்ற அமினோ ஆசிட் மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்ட உதவுவதாக Express.co.uk-வின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
மேலும் சிறந்த தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உற்பத்தியை வாழைப்பழங்கள் ஊக்குவிப்பதாகவும் Sleep Charity குறிப்பிட்டுள்ளது.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் வாழைப்பழத்தை உண்பதால் சிறந்த தூக்கத்தை பெற உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |