இப்படி ஒரு மலரா? இந்த அழகான மலரிடம் ஜாக்கிரதையா இருங்க... மாரடைப்பை ஏற்படுத்துமாம்
பொதுவாகவே உலகில் அனைவருக்கும் மலர்கள் என்றால் பிடிக்கும். மலர்களை பிடிக்காத யாரும் இருக்க முடியாது என்றால் மிகையாகாது.
எப்போதும் பார்ப்பதற்கு அழகாக கண்ணை கவரும் வகையில் இருக்கும் ஒரு மலரால் மனிதனின் உயிரையே பறிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? உலகளவில் பலரால் விரும்பப்படும் ஒரு மலரால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
அப்படிப்பட்ட மலர் எது என்பது குறித்தும் குறித்த மலர் இவ்வாறான அபாயத்தை தோற்றுவிக்க என்ன காரணம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன மலர்?
ஆசிய கண்டத்திலும், ஐரோப்பிய கண்டத்திலும் அதிகளவில் வளரக்கூடிய இந்த மலரின் பெயர் ஃபாக்ஸ் குளோ. தாரை இசைக் கருவியின் வடிவத்தில் அழகாக இருக்கும் இந்த மலரின் டிஜிடாலிஸ் எனப்படுகின்றது.
உலகம் முழுவம் பூந்தோட்டங்களில் விரும்பி வளர்க்கப்படும் இந்த மலர் பர்பிள், வெள்ளை, பிங்க் என மூன்று நிறங்களில் வளரும்.தோட்டங்களை மேலும் அழகுபடுத்துவதற்காக இந்த மலர் செடிகளை வளர்க்கிறார்கள். இப்படிப்பட்ட மலரில் அழகை விட ஆபத்தே அதிகம் இருக்கிறது.
இந்த மலர் இதயத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படும் என ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து லைவ் சைன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜென் வாங் கூறுகையில், "ஃபாக்ஸ் குளோ மலரில் கார்டியாக் கிளைகோசைடு எனப்படும் அதிக சக்திவாய்ந்த சேவதிப்பொருள் காணப்படுகின்றது.
இது இதயத்தின் இயல்பான இயக்கத்தை வலுவாக பாதிக்ககும் தன்மை கொண்டது. அதே சமயம் அந்த மலர்களில் உருவாகும் டிகோஜின் எனப்படும் வேதிப்பொருள் இதய மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதய செயலிழக்கும் சமயத்தில் டிகோஜின் மருந்தாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபாக்ஸ் குளோ செடியின் ஏதாவது ஒரு பகுதி நமது உடலுக்குள் தவறுதலாக சென்றுவிட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |