இந்த ராசி பெண்கள் ஒருபோதும் மற்றவர்களிடம் கையேந்த மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அதிக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றும் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆசை இருப்பது இயல்பான விடயம் தான்.
குறிப்பாக பெண்களை பொருத்தவரையில் தாங்களே தங்களுக்கு தேவையானதையும், விருப்பமானதையும் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நிதி சுதந்திரத்தை கொண்டிப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் பெரும்பாலான பெண்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்கும், திருமணம் வரையில் தந்தையையும், திருமணத்தின் பின்னர் கணவரையும் தங்கியிருக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களை தாங்களே பொருளாதார ரீதியில் உயர்த்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகவும், நிதி முகாமைத்துவ அறிவு நிறைந்தவர்களாகவும் இருப்பார்களாம்.அப்படிப்பட்ட பெண் ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

சுகம், ஆடம்பரம் மற்றும் செழிப்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கன் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள், பொறுமையானவர்கள் மற்றும் நடைமுறை சிந்தனை உடையவர்கள்.
இந்த குணாதிசயங்கள் அவர்களுக்கு நீண்டகால செல்வத்தை உருவாக்க உதவுகின்றன. இவர்கள் விரைவாகப் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக, வலுவான நிதி அடித்தளத்தை அமைப்பதிலும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும், தொடர்ந்து சேமிப்பதிலும் கவனம் செலுத்துவார்கள்.
நிதித்துறை, ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான தொழில்களில் ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்

மகர ராசி பெண்கள் அமைதியாக சாதிக்கும் குணம் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் திட்டமிட்டு செயல்படுபவர்கள்; நீண்டகால இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் உழைப்பவர்கள்.
இவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி செயல்படுவதில்லை. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வலுவான திட்டமிடல் மூலமாகவே தங்களின் செல்வத்தையும் வெற்றியையும் உருவாக்குகிறார்கள்.
அது ஒரு தொழில் முயற்சியாக இருந்தாலும், நிறுவனத்தில் உயர்ந்த நிலையை அடைவதாக இருந்தாலும், நீண்டகால நோக்குடன் செயல்படுவதில் அவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் இயல்பாகவே பிரகாசிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் துறைகளில் வெற்றியைப் பெற உதவுகின்றன.
இவர்கள் பெரிய கனவுகளைக் காண அஞ்சுவதில்லை. மேலும், தங்களின் கனவுகளை மற்றவர்களும் நம்பும் வகையில் ஈர்க்கும் வசீகரமும் அவர்களிடம் இருக்கும்.
ஊடகம், தொழில்முனைவு, பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரப் பிராண்டிங் போன்ற துறைகளில் இந்த ராசி பெண்கள் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் தங்களுக்கான செல்வத்தை தானே உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |