கேஸ் அடுப்பை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க! பணப்பிரச்சினை அதிகமாக இருக்கும் ஜாக்கிரதை
வீட்டில் எந்தவொரு பொருட்களை வைத்தாலும் அதற்கு வாஸ்து பார்ப்பது மிகவும் முக்கியமாகவும். அதிலும் சமையலறை என்பது வீட்டின் முக்கியமான இடம் என்பதால், சில வாஸ்து முறைகளை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் வாழ்க்கையில் சில எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியதாயிருக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை காணப்பட்டால், குடும்பத்தில் ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
எந்த திசையில் சமையலறை கட்ட வேண்டும்?
சமையலறை பொதுவாக தென்கிழக்கு மண்டலத்தில் கட்டுவதுடன், சமையல் செய்யும் அடுப்பினை கிழக்கு திசையில் வைத்துவிட்டு, சமைப்பவர் கிழக்கு நோக்கி சமைத்தால், வீட்டில் பண பிரச்சினை ஏற்படாதாம்.
மேலும் குடிநீர் சுத்திகரிக்கும் மின்சாதனம் இவற்றினை வடகிழக்கு திரையிலும், வீட்டில் பாத்திரம் கழுவும் தொட்டி வடகிழக்கு, அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும்.
தெற்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் மின் சாதானங்களை வைக்கலாம். தண்ணீரையும், அடுப்பையும் ஒரே வரிசையில் வைத்தால், கருத்துவேறுபாடு அதிகரிப்பதுடன், சிறு சிறு விஷயங்களில் கூட சச்சரவு ஏற்படும்.
ஆனால் இவ்வாறு அருகருகே நீங்கள் வைக்க நேர்ந்தால், இரண்டிற்கும் இடையே சிகப்பு கோட்டை போட்டுக்கொள்ளவும். அல்லது பச்சை நெடி ஒன்றினை நடுவில் வைத்துக்கொள்ளவும்.
சமையலறையில் கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது.