உலகிலேயே மது பழக்கம் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா? இந்தியாவும் இருக்காம்..
தற்போது இருக்கும் கலாச்சார மாற்றங்களினால் மனிதர்கள் மோசமான பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்.
உலகில் நடக்கும் பாதி குற்ற செயல்களுக்கு பின்னால் இருப்பது மது போதை தான். உலகில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
மது விற்பனை உலகிலுள்ள மிகப் பெரிய வியாபாரங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா அல்லது இந்தியா போன்ற சக்திவாய்ந்த நாடுகளிலும் இது போன்ற பழக்கங்கள் உள்ளன.
மாறாக, தனிநபர் மது அருந்துவதில் முதலிடத்தில் உள்ள நாடுகள் பெரும்பாலும் சிறிய ஐரோப்பிய நாடுகளாகும்.
அந்த வகையில், உலகில் உள்ள நாடுகளில் குடிமகன்களை அதிகம் கொண்டுள்ள நாடு எது என்பதையும், அதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் என்பதனையும் பதிவில் பார்க்கலாம்.
மால்டோவா | கிழக்கு ஐரோப்பிய நாடான “மால்டோவா” தான் உலகிலேயே அதிக மது அருந்தும் நாடாக பார்க்கப்படுகிறது. இங்கு 2.46 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இந்த நாட்டில் ஒரு சராசரி குடிமகன் ஆண்டுக்கு 15.2 லிட்டர் மது அருந்துகிறார். இது தோராயமாக ஆண்டுதோறும் 100 பாட்டில்களுக்கு மேல் ஒயின் அல்லது 500 பைண்ட் பீர் குடிப்பதற்குச் சமம். |
லிதுவேனியா | “லிதுவேனியா” இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடிக்கிறது. இங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஆண்டுக்கு 15 லிட்டர் மது அருந்துகிறார்கள். |
செக் குடியரசு | செக் குடியரசில் வாழும் மக்கள் ஆண்டு 4.4 லிட்டர் மது அருந்துகிறார்கள். செக் குடியரசு மக்கள் மதுவை விட பீர் அருந்துவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். |
சீஷெல் | அதிகமாக மது அருந்தும் நாடுகளில் ஐரோப்பிய நாடுகளே அதிகமாக உள்ளன. இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான சீஷெல்ஸ், ஆண்டுக்கு ஒரு நபருக்கு 13.8 லிட்டர் மது அருந்துகிறார். அதே போன்று நைஜீரியா, ஏழாவது இடத்தில் உள்ளது, அங்கு சராசரியாக ஒரு வயது வந்தவர் ஒவ்வொரு ஆண்டும் 13.4 லிட்டர் மது அருந்துகிறார். |
இந்தியா | இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருக்கிறார்கள். ஆனால் மது பழக்கம் அவ்வளவு பெரிதாக இல்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளை விட இந்தியா கீழே உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 103-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |
