தங்க விலை குறைவு: வளர்ந்த நாடுகளில் விலை குறைவாக இருப்பது ஏன்?
சமீப நாட்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் விலை நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்வும் தங்கத்தை மக்களால் வாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறன.
இந்தியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கத்தை அவர்களின் அந்தஸ்து மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறார்கள்.
இதனால் இறக்குமதி வரிகள், பிற வரிகள் மற்றும் ஏற்ற இறக்கமான விகிதங்கள் தங்கத்தின் விலையை அதிகமாக்குகிறது. இருப்பினும், சாதகமான கொள்கைகள், குறைந்த வரிகள் மற்றும் திறமையான நிர்வாகம் காரணமாக தங்கத்தை மலிவு விலைக்கு கொடுக்கும் நாடுகளும் உள்ளன.
அந்த வகையில் தங்க விலையை மலிவாக கொடுக்கும் நாடுகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்கா | தங்கத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நாடுகளில் அமெரிக்கா தான் முதல் இடத்தில் இருக்கிறது. நிலையான பொருளாதாரம், விற்பனையாளர்களிடையே வலுவான போட்டி, உலகளாவிய ட்ரெண்டுகளைப் பின்பற்றும் விலைகள் உள்ளிட்ட காரணங்களினால் தங்கவிலை குறைவாக இருக்கிறது. சுங்கக் கட்டணங்கள் இருந்தாலும் கூட, இங்கு விலை இந்தியாவை விட குறைவு தான். சிறந்த முதலீட்டாளர்களுக்கு இதுவே சிறந்த தீர்வாக இருக்கும். |
ஆஸ்திரேலியா | சுரங்கத்திலிருந்து நேரடியாக தங்கம் வெட்டியெடுக்கப்பட்டுவதால் ஆஸ்திரேலியாவில் தங்க விலை குறைவு. வலுவான தேவை மற்றும் நம்பகமான ஆதாரங்களுடன், தங்கத்தை வாங்குபவர்கள் நியாயமான விலையில் அரசாங்கம் கொடுக்கிறது. மற்ற நாடுகளிலும் பார்க்க, இங்கு விற்பனை செய்யப்படும் தங்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட உயர்தரம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். |
சிங்கப்பூர் | திறமையான நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிங்கப்பூரில் முதலீட்டு தர தங்கத்தின் மீது ஜிஎஸ்டி இல்லாததால், இங்கு தங்கத்தின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவு. அதே போன்று நிலையான நிதி அமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், மதிப்பு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. இதுவே இந்த நாட்டின் சிறப்பாகும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
