இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்லதா? கெட்டதா? அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சாகுனங்கள்
பொதுவாக சில உயிரினங்கள் வீட்டிற்கு வந்தால் நல்ல சகுனம் என்பார்கள்.
உதாரணமாக, சிட்டுக்குருவி வீட்டிற்கு வருவது நல்லது என்பதற்காக பலரும் வீடுகளில் கூடு கட்டி வைத்திருப்பார்கள்.
அதே சமயம், சில உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் கெட்ட சகுனமாகவும் கருதப்படுகிறது.
இன்னும் சிலருக்கு உயிரினங்கள் வீட்டிற்கு வருவது நல்லதா? கெட்டதா? என்பதில் சந்தேகம் இருக்கும்.
இப்படியான சந்தேகங்கள் இருப்பவர்கள் பறவைகள் வீட்டிற்கு வருவது நல்லதா? கெட்டதா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. காகம்
காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் எனக் கூறுவார்கள். காகத்திற்கு அமாவாசை தினங்களில் சாப்பாடு வைப்பார்கள். இப்படி செய்வதால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது ஐதீகம். காகத்திற்கு சாப்பாடு வைக்கும் போது வீட்டிற்கு வெளியே, மொட்டை மாடி, பால்கனியில் சாப்பாடு உள்ளிட்ட இடங்களில் வைக்கலாம்.
2. வௌவால்
இந்து மத சாஸ்திரப்படி வௌவால் வீட்டிற்கு வருவது கெட்ட சகுனம் என்கிறார்கள். இதனால் பண பிரச்சினை வரக் கூடும். அதிலும் வௌவால் ரத்த காயத்தோடு வந்தால் ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
3. கழுகு
வீட்டிற்குள் கருடன் வந்தால் நல்ல சகுனம் என்கிறார்கள். வானத்தில் உயர்ந்து பறக்கும் பறவைகளில் கழுகும் ஒன்று. சில சமயங்களில் வீட்டிற்குள் கழுகு நுழையும். இது மத நம்பிக்கைகளின்படி கெட்ட சகுனமாக பார்க்கப்படுகின்றது. கழுகு வீட்டிற்குள் நுழையும் போது ஏற்கனவே வீட்டிலுள்ள பிரச்சினைகள் அதிகரிக்கும். அதிலும் குடும்ப உறுப்பினர்களிடையு விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4. சிட்டுக்குருவி
வீட்டுக்குள் சிட்டுக்குருவி வந்தால் அதனை விரட்டியடிக்க வேண்டாம் என்பார்கள். தற்போது வீடுகளில் சிட்டுக்குருவி வருவது குறைவாகவே உள்ளது. இப்படியான நேரங்களில் வீட்டிற்கு சிட்டுக்குருவி வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |