பறவைகளால் பறக்கும் போது தூங்க முடியுமா..! எந்த பறவை இப்படி தூக்கும்னு தெரியுமா?
பொதுவாகவே உலக தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மற்றும் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டே தான் செல்கின்றது.
நமது அறிவு என்பது ஒரு எறும்பு என்றால் வாழ்க்கையும், இந்த உலகம் தொடர்பில் நாம் அறியாத விடயங்களும் யானையை போன்றது. அந்த வகையில் இந்த பதிவிலும் ஒரு வியப்பூட்டும் விடயம் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக பறவைகள் பறப்பதே இயற்கையில் இருக்கும் அளவற்ற விந்தையை பறைசாற்றுகின்றது. பறவையால் தூங்கும் போதும் பறக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அல்பட்ரோஸ் எனும் பறவைக்கு இது சாத்தியமாகின்றது. இவற்றால் தூங்கும் போதும் திசை மாறாமல் இயல்பாக பறக்க முடியும்.
அல்பட்ரோஸ்
அல்பட்ரோஸ் எனும் பறவை தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இந்த பறவை இனம் பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டு காணப்படும்.
அல்பட்ரோஸ் பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் தான் கொண்டிருக்கும். சில வகைப் பறவைகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கொண்டிருக்கும். இப்போது உலகில் இருக்கும் பறவைகளிலேயே மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்டது அல்பட்ரோஸ் தான்.
இதன் இறக்கைகள் 3.7 மீட்டர் வரை விரியக்கூடியது. இவ்வளவு பெரிய இறக்கைகள் நீண்டகாலத்துக்கு பறக்க உதவுகின்றன. இந்த பறவையானது ஒவ்வொரு இனசேர்க்கையிலும், ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடம்.
இதன் இறக்கைகள் பெரியதாக இருக்கும். மேலும் இறக்கைகள் ஆனது 3.7 மீட்டர் விரிய கூடியது, நீண்ட ஆயுட்காலம் உடையது, அதாவது 40 ஆண்டுகள் உயிர் வாழ கூடியது.
அல்பட்ரோஸ் பறவைகள் ஒருமுறை பறக்கத் தொடங்கிவிட்டால் நிலத்தில் கால்வைக்கவே வைக்காது. குறைந்த பட்சம் ஒரு ஆண்டும், அதிகபட்சமாக 5 ஆண்டுக்கு மேலாகவும் அவை பறந்துகொண்டே இருக்கும் ஆற்றல் கொண்டது.
ஆண்டுக்கணக்காக நிலத்தில் கால் வைக்காமல் இருக்கும் இந்த பறவைகள் இனப் பெருக்க காலம் முழுவதும் நிலத்தில் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |