இந்த ராசியினர் காதல் லீலைகளில் பட்யை கிளப்புவார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை,பொருளாத நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தாவர்கள் ரொமாண்டிக்காக பேசுவதிலும் துணையை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதிலும் கில்லாடிகளாக இருப்பார்களாம்.
அப்படி காதல் லீலைகள் அனைத்திலும் பட்டையை கிளப்பும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்களின் தீவிரமான உணர்ச்சிவசப்படும் தன்மை காரணமாக காதல் விடயத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதலில் துணையை எந்த வகையில் எல்லாம் மகிழ்ச்சிப்படுத்தலாம் என்ற கலையை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்க்கை துணையின் ஆசைக்களுக்கும் விருப்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்கள் காதல் வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் ரொமாண்டிக்காக பேசியே சரிசெய்து விடுவார்கள்.
ரிஷபம்
காதல் மற்றும் அன்பின் கிரகமாக சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர் இயல்பாகவே காதல் திருமணத்தின் மீது அதிக ஆசையை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே உடல் ரீதியான இன்பங்கள் மீது மற்ற ராசியினரை விட அதிக ஈடுபாடு இருக்கும். இவர்கள் காதலில் ஒரு இனிமையான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமான இருப்பார்ள். இவர்களுக்கு துணையை மகிழ்விக்கும் அத்தனை லீலைகளும் தெரிந்திரிக்கும்.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரளும் காதல் விடயத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் சின்ன சின்ன விடயங்களில் கூட துணையை மகிழ்விக்கும் கலையை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் உருவாக்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
சண்டைகளை கையாளும் கலையும் இவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். பரிசுகளை வழங்கி, ரொமாண்டிக்கான பேசியே பிரியும் தருவாயில் உள்ள காதலையும் மீட்கும் ஆளுமை இவர்களுக்கு இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |