scientific facts: விலங்குகளுக்கும் கனவு தோன்றுமா? பலரும் அறியாத விடயம்
பொதுவாகவே தூக்கத்தின் போது கனவு வருவது மிகவும் இயல்பான விடயம். வாழ்வில் ஒரு முறையேனும் கனவு தோன்றிய அனுபவம் அனைவருக்குமே நிச்சயம் இருக்கும்.
மனிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கனவு தோன்றுமா? என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? இது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
விலங்குகளுக்கும் கனவு தோன்றுமா?
காகத்திடமிருந்து வடையை பறித்த நரியின் பழங்காலக் கதைகள் தொடக்கம், நவீன அறிவியல் ஆய்வுகள் வரையில் விலங்குகள் மிகவும் அறிவாற்றல் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
விலங்குகளின் எண்ண ஓட்டங்கள், செயல்முறைகள் எவ்வளவு தெளிவானது என்பதை பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அறிந்திருக்கக்கூடும்.
விலங்குகள் தன் அறிவைப் பயன்படுத்தி உணவை வேட்டையாடுகின்றன. பாதுகாப்பாக இருப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றன்.
தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்கின்றன. இப்படி மனிதர்களுக்கு நிகராக, ஏன் சில சமயங்களில் மனிதர்களின் அறிவையே மிஞ்சும் விடயங்களை விலங்குகள் செய்கின்றன.
அப்படியிருபையில் அவற்றுக்கு கனவு தோன்றுவதும் நியமான விடயம் தானே. ஆம் மனிதர்களை போல் சில விலங்குகளுக்கும் கனவு தோன்றுகின்றது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதரங்கள் காணப்படுகின்றது.
விலங்குகளைப் தொடர்பான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அவை தூங்கும்போது கனவு காண்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பல்வேறு வகையான கனவுகள் தோன்றுகின்றன. . மனிதர்கள் தங்கள் இணையிடம் பேசி களிப்படைவது போல விலங்குகளுக்கும் கனவு வரும். அப்போது அவை முகம் தூக்கத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடியும்.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் சிலர் இந்த அறிகுறிகளை கண்டிருக்க கூடும். குறிப்பாக நாய்க்கு இரையை உண்ணுவதை போல கணவு தோன்றும் போது, அவை வெறும் வாயை கடிக்க முயற்ச்சி செய்யும்.
சில பிராணிகள் உறக்கத்தின் போது சத்தம் எழுப்புவதும், உடல் பாகங்களை அசைப்பதும் அவை கனவு காணுவதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். அந்த வகையில் நாய், பூனை, குதிரை குறிப்பிட்ட சில விலங்குகள் கணவு காணும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |