30 ஆண்டுளுக்கு உணவு, நீர் இன்றி உயிர் வாழும் உயிரினம்! தீயில் போட்டாலும் சாகாதா?
பூமியிலிருந்து மனிதர்கள் அழிந்த பிறகும் கூட ஒரு சிறிய உயிரினம் வாழும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ முடியும். அப்படிப்பட்ட ஒரு விசித்திர விலங்கு பற்றிய முழுமையான விபரங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
நீர்க்கரடி
அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான உயிரினம் தான் அப்படி நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றான டார்டிகிரேட் என்று அழைக்கப்படும் நீர்க்கரடி.
இது கடலின் அடியிலும், பனி உறைந்து கிடக்கும் இடங்களிலும் வாழ்கின்ற ஒரு அரை மில்லி மீட்டர் அளவு கொண்ட உயிரினமாகும்.
நீர் யானை, நீர்க் கோழி, நீர்க் குதிரை, நீர்ப் பறவையென எண்ணிலடங்கா நீர் வாழ்விலங்குகள் காணப்படுகின்ற போதிலும் இந்த டார்டிகிரேட் சுவாரஸ்யமான சில இயல்புகளை கொண்டுள்ளமை இயற்கையின் விந்தையை பறைசாற்றுகின்றது.
இது நிலத்தில் வாழும் கரடிபோல் தோற்றமளிதாலும் இது, பார்ப்பதற்கு மாறுபட்ட தோற்றத்துடன் இருக்கும். வெற்றுக் கண்ணால் இந்த உயிரினத்தை பார்க்க முடியாது. நுணுக்கு காட்டி உதவியுடன் தான் இதனை பார்ப்பது சாத்தியம்.
இந்த டார்டிகிரேட் 150 டிகிரி செல்சியஸ் அல்லது 302 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் மற்றும் மைனஸ் 457 டிகிரி குளிரிலும் வாழும் திறன் கொண்டது.
பூமியில் மனிதர்கள் அழிந்தாலும் கூட இந்த உயிரினம் வாழும் சூரியன் வெப்பத்தை இழந்து இருளில் மூழ்கும் வரையில் இந்த டார்டிகிரேட் இனம் நிலைத்திருக்கும்.
இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் உயிர் வாழ முடியும். இந்த நீர்க் கரடியின் நீளம் 0.5 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும்.
இதை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்தாலும் அல்லது பனியில் உறைய வைத்தாலும் சரி அதனை அழிக்க முடியாது.அவை சுமார் 200 ஆண்டுகள் வரையில் வாழும் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
