Fatty Liver: கல்லீரல் கொழுப்பை கரைக்கும் அற்புதமான 3 ஜூஸ்
உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்றான கல்லீரல் உடலில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலை செய்கின்றது. குறிப்பாக நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது.
மேலும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு அளப்பறியது. கல்லீரல் பாதிப்புகளில் மிகவும் அபாயகரமான பாதிப்பு தான் ஃபேட்டி லிவர் அதாவது கொழுப்பு கல்லீரல் நோய் என அறியப்படுகின்றது.

பொதுவாக குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யாருடைய கல்லீரலிலும் கொழுப்பு இருக்காது. கல்லீரலில் கொழுப்பு படிப்படியாக சேர்ந்து ஆபத்தான கட்டத்தை அடையும் போது ஏற்படும் நோய் நிலை தான் ஃபேட்டி லிவர் எனப்படுகின்றது.
இவ்வாறு படிய ஆமரம்பிக்கும் கொழுப்பு கல்லீரலின் மேல் படியாமல் கல்லீரலில் உள்ள திசுக்களுக்குள் படிய ஆரம்பிக்கும் ஒருவருடைய கல்லீரலில் ஐந்து சதவிகிதம் வரையில் கொழுப்பு காணப்படுவது இயல்பானது.

ஆனால் அதற்கு மேல் இருந்தால் கல்லீரலின் செயல்பாடு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஃபேட்டி லிவர் பிரச்சினை பெரும்பாலும் மது பழக்கம் இருப்பவர்களுக்கே அதிகமாக ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் வேறுசில காரணங்களுகளால் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உடல் பருமன், நீரிழிவு, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைபாடு, தைராய்டு உடையவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

முறையற்ற உணவுப் பழக்கமும், மாறிவரும் வாழ்க்கை காரணமாகவும், மது பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட ஃபேட்டி லிவர் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
கொழுப்பு கல்லீரல் நோயை எதிர்த்துப் போராட, இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சேதி, கொழுப்பு படிவதைக் குறைப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 3 ஆரோக்கியமான பானங்களை பரிந்துரைக்கிறார்.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.கிரீன் டீ

இரைப்பை குடல் நிபுணரின் கூற்றுப்படி, கிரீன் டீயில் EGCG (எபிகல்லோகேடசின்-3-கேலேட்) போன்ற கேட்டசின்கள் நிறைந்துள்ளன, இது கல்லீரல் நொதிகளை மேம்படுத்துவதாகவும் கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைப்பதாகவும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. காபி

கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காப்பி குடிப்பது நல்லது என குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி பரிந்துரைக்கிறார். ஏனெனில் இது கொழுப்பு கல்லீரல் மற்றும் ஃபைப்ரோஸிஸ் அபாயத்தைக் குறைக்கும். "ஆர்கானிக் காபியை தேர்வு செய்வதுடன் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம். பதிலாக தேன், மோங்க் பழம் அல்லது ஸ்டீவியாவை சிறிது சாப்பிடுவது நல்லது," என்று அவர் பரிந்துரைக்கிறார்.
3. பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் சாறு கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும் மற்றும் கொழுப்பு குவிப்பைக் குறைக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான பீட்டாலைன்களால் நிரம்பியுள்ளது.எனவே பீட்ரூட் ஜூஸ் குடிப்பது கொபுப்பு கல்லீரல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |