இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையில் மாட்ட வேண்டும்... வாஸ்து சாஸ்த்திர தகவல்
பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்த்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள்.
அப்படி வீடுகளில் வைக்கும் காலணிகளில் இருந்து சுவர்களில் மாட்டும் புகைப்படங்கள் வரைக்கும் அனைத்துக்கும் வாஸ்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
அந்தவகையில் பலரின் கேள்வியாக இருப்பது மரணித்தவரின் புகைப்படத்தை வீட்டில் எந்த இடத்தில் அல்லது எந்த திசையில் மாற்ற வேண்டும் என்பது தான். அது பற்றிய விளக்கத்தை தற்போது பார்க்கலாம்.
இறந்தவரின் புகைப்படங்களை எங்கு வைக்க வேண்டும்?
இறந்தவரின் புகைப்படத்தை சுவர்களில் தொங்கவிடக் கூடாது. இது முன்னோர்களை புண்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் ஆசீர்வாதங்களை மறுப்பது மட்டுமல்லாமல், இது பித்ரா தோஷத்தையும் கொண்டு வருகிறது.
இறந்தவரின் புகைப்படத்தை உங்கள் வீட்டிற்கு வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும். மூதாதையரின் படங்களை வெளியில் இருந்து பார்ப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது.
வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தில் இறந்தவரின் புகைப்படம், அவர்களின் பார்வை தெற்கு நோக்கி இருக்கும்படி வடக்குச் சுவர்களில் வைக்கப்பட வேண்டும்.
இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் உள்ள பூஜையறையில் வைக்க கூடாது. ஏனெனில் இது வீட்டின் சூழலை பாதிப்பதாக இருக்கும்.
இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் ஹாலிலும் வீட்டின் படுக்கையறையிலும் வைக்க கூடாது இது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |