உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா?
எம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி உலகத்திற்கு முடிவு என்று ஒன்று உள்ளதா? என்பது தான். இதற்கு பதில் கூறுமுகமாகத் தான் உலகின் கடைசி சாலை ஒன்றை புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மண்ணாக இருந்ததை தான் தார் போட்டு எல்லோரும் சாலையாக மாற்றி உள்ளனர். இந்த சாலைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்தில் கொண்டு சேர்க்கின்றன.
அந்த வகையில் உலகின் கடைசி சாலை எனப்படும் இந்த இடத்தில் என்னெல்லாம் ஆச்சரியம் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் கடைசி சாலை
இந்த உலகின் கடைசி சாலைக்கு பெயர் 'E-69 நெடுஞ்சாலை' ஆகும். இது நோர்வேயில் அமைந்துள்ளது. இந்த சாலைதான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தை காண்பதற்கு ஏராளமாநோர் வருகை தருகின்றனர். இந்த கடைசி சாலை பூமத்தியரேகைக்கு மேலே அமைந்துள்ளது. இது வட ஐரோப்பாவில் உள்ள 'Nordkapp' கிராமத்தை நோர்வேயில் உள்ள 'Oldafevoord' கிராமத்துடன் இணைக்கின்றது.
இந்த சாலை 129 கி.மீ. தூரத்தை கொண்டது. இந்த சாலையில் நீளமான சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இது 'நார்த் கேப்' எனப்படும். இது கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது.
மற்றும் 6.9 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலையில் யாரும் தனியாக நடந்து செல்ல முடியாதாம். இந்த சாலையில் கோடை காலத்திலும் பனி கூடுதலாக பொழியுமாம். இதில் காற்று மிகவும் வேகமாக வீசுகின்றது.
வானிலை முன்னறிவிப்புகள் இந்த சாலையில் வேலை செய்யாது என்பதால் அடிக்கடி இயற்கை சீற்றம் வந்தாலும் விரைவில் யாருக்கும் தெரிய வராததால் யாரும் தனியாக செல்ல இந்த சாலையி்ல் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த சாலையை கட்டி முடிப்பதற்கு சுமார் 62 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது. தற்போது இந்த சாலை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |