தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!
பொதுவாகவே கோடை காலத்தில் அனைவரும் இளநீரை விரும்பி குடிக்கின்றார்கள். அதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன.
உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். ஆற்றல் இளநீருக்கு இருக்கின்றது.
உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுப்பதிலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், இது நீரிழப்பை தடுப்பதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் கொடுக்கின்றது.
அவ்வளவு மருத்துவ குணம்கொண்ட இளநீரில் உள்ள தண்ணீர் எங்கிருந்து இளநீருக்குள் வருகின்றது என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? இது தொடர்பான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எங்கிருந்து வருகிறது?
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. இரத்தச் சோகையைப் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.
இளநீரின் உள்ளே இருக்கும் இந்த நீர் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் எனும் பகுதி பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.
கருப்பை எவ்வாறு வளரும் கருவுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குகிறதோ, இது போல் இந்த பகுதிதான், நன்கு வளர்ந்து தேங்காயாக மாறுகிறது.
எண்டோஸ்பெர்ம் எனும் இந்த பகுதிக்கு தென்னை மரம் தன் செல்கள் மூலம் வேர்களில் இருந்து தண்ணீரை எடுத்து, இந்த பகுதிக்கு கொண்டு செல்கின்றது.இந்த தண்ணீரில் எண்டோஸ்பெர்ம் கரையும்போது, கெட்டியாக மாறும்.
தென்னை மரத்தின் வேர்களால் உறிஞ்சப்படும் நீர், செல்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, காய்களில் இந்த ஆரோக்கியமாக நீரை உருவாக்குகின்றது. தேங்காய் முதிர்ச்சிய ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வற்ற ஆரம்பிக்கின்றது.
தேங்காய் காய்ந்ததும், உண்ணும் தேங்காய் கருவே இந்த எண்டோஸ்பெர்மின் திண்ம வடிவமாகும்.
இந்த முழு செயல்முறையும் தென்னை மரத்தின் செல்கள் மூலமே இடம்பெருகின்றது.
ஆரம்பத்தில் இது வெள்ளை கூழ் வடிவில் காணப்பட்டு பின்னர் உலர் தேங்காய் வடிவத்துக்கு மாறுகின்றது. இதன் காரணமாக, முற்றிய தேங்காயில் தண்ணீர் மிக குறைவாக காணப்படுகின்றது அல்லது தண்ணீர் இருப்பதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |