தவறியும் பல்லியை மட்டும் கொல்லாதீங்க... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே வீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கிய இடம் வகிக்கின்றது. பல்லியை வைத்து பல்வேறு சகுணம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது.
பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும் ஏற்படும். பல்லி இருந்தாலே வாழும் இடம் என்று சொல்வார்கள்.ஆனால், சுவற்றில் பல்லியைப் பார்த்தாலே தெறிக்க ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
வீட்டில் சில நேரங்களில் நாம் குட்டி பல்லிகள் சுற்றுவதை காண்டிருப்போம் இதற்கு இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் என்ன பலன் இருக்கின்றது என்பது குறித்தும் பல்லிகளை கொன்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திரகிரகணம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
ஏன் கொல்ல கூடாது?
இந்து சாஸ்திரத்தின் படி பல்லிகள் மகா லட்சுமியின் வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே வீட்டில் பல்லி குட்டிகள் நடமாடினால், இது மிகவும் நல்ல அறிகுறி என நம்பப்படுகின்றது.
எனவே ஒவ்வொரு முறை பல்லியை பார்க்கும் போதும் உங்களின் நிதி பிரச்சனை தீரும், கஷ்டங்கள் தீரும் எனபது ஐதீகம்.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நல்ல நிகழ்வுகள் குறித்து உணர்துவதாகவே பல்லியின் குட்டியை காண்பது பார்க்கப்படுகின்றது.
ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டி பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் நல்ல சகுணம் ஆகும். அதனால் எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.
மேலும் ஆண் மற்றும் பெண் பல்லிகள் வீட்டில் இணைவதை பார்த்தால், கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும்.
நல்ல நாட்களின் குட்டி பல்லி வீட்டிற்கு வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும் என இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. வீட்டில் பல்லி குட்டிகள் ஓடினால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும்.
வீட்டில் பல்லி குட்டியை கண்டால் அதை விரட்டவோ, கொல்லவோ கூடாது. அதை கொல்வதால் மோசமான பலன்களை சந்திக்க நேரிடும். பாரிய பண தட்டுப்பாடு மற்றும் தொழில் ரீதியான வீழ்சிக்கு வழிவகுக்கும்.
ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் பயப்பட தேவையில்லை அதனை நிலத்தில் புதைத்துவிட்டால் எந்த தீமையும் ஏற்படாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |