பிறரை அவமானப்படுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும்?
பிறரை அவமானப்படுத்தினால் நாம் என்ன ஆவோம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிறரை அவமானப்படுத்துதல்
பிறரை அவமானப்படுத்துவது என்பது உங்களின் சிந்தனை, குணாதிசயம் எதிர்மறை வழியில் செல்வது என்றும், உங்களை மற்றவர்களிடம் இருந்து தூரப்படுத்தும் செயல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் பிறரை காயப்படுத்துவதாகவும், பாதுகாப்பின்மை, சொந்த எண்ணங்களை கையாளத் தெரியாதை இவ்வாறு வெறுப்பாக வெளிப்படுமாம்.
பிறரை மதிக்க தெரியாதவர்களிடம் நல்ல குணம் இருப்பதில்லை. நீங்கள் பிறரை அவமானப்படுத்தும் போது, அன்புரிக்குரியவர்களும் காயப்படுவார்கள்.
மற்றவர்களை அவமானப்படுத்தும் போது உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஆக்கிரமித்து பழிவாங்கும் உணர்ச்சிகள் கூட மேலோங்க வாய்ப்பு இருக்கிறது.
image: istockphoto
பிறரை காயப்படுத்திக் கொண்டே இருந்தால் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட உங்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் அன்பு என்ற ஒன்று உங்களை விட்டு நீண்ட தூரம் விலகி சென்று இருக்கும்.
அன்பு, பிறரின் ஆசைகளுக்கு மதிப்பளித்தல், சகோதரத்துவம் எல்லாம் காணமல் போய் இருக்கும். இந்த உன்னத உணர்வுகள் உங்களுக்கு என்னவென்றே தெரியாமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது.
image: istockphoto
அதனால் பிறரை எப்போதும் காயப்படுத்த வேண்டும் என நினைக்காதீர்கள். காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்தவே வேண்டாம். இக்கட்டான சூழல்களில் இருக்கும்போது அமைதியை கடைபிடிக்கவும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
image: istockphoto
உணர்ச்சிகளை நிர்வகித்து சொற்களை நிதானமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளாவிட்டால், உங்களது வாழ்க்கை கசப்பானதாகவே இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |