தங்கம் விலை எப்போது குறையும்? தெளிவாக கூறிய பொருளாதார நிபுணர் சீனிவாஸ்
இந்தியாவில் கடந்த சிய மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான பூரண விளக்கத்தை பொருளாதார நிபுணர் சீனிவாஸ் கூறியுள்ளார்.
தங்கத்தின் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருக்கிறது. தங்கம் விலை இதுபோல குழப்பத்தில் இருப்பதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெரிந்திராத கேள்வி.
இதற்கான பதிலை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பில் சீனிவாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது
"தங்கம் விலை நேற்று திடீரென உயரத் தொடங்கியது. தற்போது அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3200 டாலரை தாண்டிவிட்டது. இந்தியாவிலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8700ஐ தாண்டிவிட்டது. இது தான் தங்ஙகத்தின் குறைந்தபட்ச விலை என்றே கூறலாம்.
தங்கம் விலை இதை விட குறைய வாய்ப்பு இல்லை. அப்படி குறைந்தால் அதை வாங்கி கொண்டே இருக்கலாம். இப்போதைக்கு அமெரிக்கா சீனா வர்த்தகத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் தங்கம் விலை குறைகிறது.
அதேநேரம் இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் பணவீக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. தெளிவாக கூறினால் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை வர வாய்ப்பு உள்ளது.
இந்த பொருளாதார மந்த நிலை டிசம்பர் மாதத்திற்குள் திவிரமாய் வரும். அந்தச் சமயம் தான் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியைக் குறைக்கும்.
அப்போது தங்கம் விலை அதிகரிக்கும். இந்த வலை அதிகரிப்பு நீண்ட காலத்திற்கும் நீடிக்கும். தற்போது போர் சூழல் காரணமாகத் தற்காலிகமாகத் தங்கம் விலை உச்சம் தொட்டுக் குறைந்துள்ளது.
இதுவே தங்கத்தின் குறைவான விலை என கூறலாம். இப்போது தங்கத்தை வாங்குவோர் வாங்கலாம். இதற்கு பின்னர் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் என பொருளாதார வல்லுனர் சீனிவாஸ் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |