உடல் பலவீனமாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்யலாமா?
பொதுவாக தற்போது இருப்பவர்கள் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்காக உடற்பயிற்சி மற்றும் டயட்களை பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் ஆரம்ப காலங்களில் தங்களின் நாளை நல்லப்படியாக வைத்து கொள்வதற்காகவும் ஆரோக்கியமாக வாழவும் தான் உடற்பயிற்சி செய்தார்கள்.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இது அன்றைய நாளை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதனுடன் நோய்களின்றிய ஒரு வாழ்க்கையும் தருகின்றது.
இதன்படி, உடல் சோர்வாக இருக்கும் பொழுது உடற்பயிற்சி செய்யலாமா? என்பதனை தெரிந்து கொள்வோம்.
சோர்வான நேரங்களில் உடற்பயிற்சி செய்யலாமா?
பொதுவாக உடற்பயிற்சி செய்யும் பொழுது இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டப்படுகின்றது. ஆனால் காய்ச்சல், அல்லது வேறு ஏதாவது நேரங்களில் உடல் களைப்பாக இருக்கும்.
இது போன்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி, ஒருவர் காய்ச்சலில் இருக்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்து தாக்கிக் கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள், உடல் நிலையை இன்னும் மோசமாக்கும்.
இதனால் அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, மயக்கம் இது போன்ற் ஆபத்துகள் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |