நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்?
அண்மைகாலமாக இணைத்தில் லைராலாக பேசப்பட்டு வரும் விடயம் தான் தெருநாய்கள் குறித்த விடயம். நாய் கடி சம்பவங்கள் மற்றும் தெருநாய்களின் தொந்தரவு என்பன பாரபட்சமின்றி இந்தியாவின் அனைத்து இடங்களிலுமே அரங்கேறி வருகின்றது.
பல உயிர்களை காவு வாங்கிய இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் நாய்களை பிடித்துக்கொண்டு போய் முகாம்களில் அடைக்க வேண்டும் என அண்மையில் உயர் நீதிமற்றம் உத்தவு பிறப்பித்தது அனைவரும் அறிந்ததே.
அதனை தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இப்படி விலங்குகளின் உரிமையை பறிப்பது சரியா, தவறா? நாய்களின் சுதந்திரம் முக்கியமா? மனிதர்களின் பாதுகாப்பு முக்கியமா? என பலரும் விவாதித்து வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு பலரும் பல்வேறு கருத்துக்ளை கூறிவருகின்றார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நம்மையோ, நம்மை சார்ந்தவர்களையோ நாய் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாய் கடியால் ஏற்படும் நோய்கள்
ரேபிஸ்: நாய் கடியால் ஏற்படக்கூடிய மிகவும் அபாயகரமாக உயிர் கொல்லி நோய் தான் ரேபிஸ். இந்த நோய் உடலை தாக்கிவிட்டால், பின் அதற்கு சிகிச்சை அளிப்பது கடினமானது. காரணம் இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இதைத் தடுக்க நீங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
தெருநாய்கள் மட்டுமன்றி வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்ததலும் இந்த நோய் ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது உயிராபத்தை ஏற்டுத்தும் அளவுக்கு அபாயகரமானது.
டெட்டனஸ் : நாயின் வாயில் இருக்கும் பாக்டீரியா காயத்தின் வழியாக உடலுக்குள் நுழைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது உடலில் டெட்டனஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும். அதாவது தசைகளில் விறைப்பை ஏற்படுத்தக்கூடும்.
தோல் ஒவ்வாமை: நாய் கடித்தால் தோல் ஒவ்வாமை ஏற்படடுவதற்கான வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக, தோலில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படும். இது சருமத்தில் சிவப்பை புள்ளிகளை தோற்றுவிக்கும்.
பாக்டீரியா தொற்று : நாய்களால் கடியின் போது பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து வீக்கம், சிவத்தல் மற்றும் சீழ் ஆகிய அபாயகரமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றை தடுக்க மருத்துவரை அணுகி, ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த உடனேயே உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
முதலில் என்ன செய்ய வேண்டும்?
நாய் கடிப்பதால், ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், நாய் கடித்தால் முதலில் காயத்தை நன்றாக ஓடும் தண்ணீரில் 15 தொடக்கம் 20 நிமிடங்கள் கழுவ வேண்டும்.
அதன் பின்னும் ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது என்பதால், பாதுகாப்புக்காக உடனடியாக மருத்துவரை அணுகி ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த தொற்று மற்றும் வைரஸ் உடலில் விரைவாக உடலில் பரவும். மேலும் இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் என்பதால், இதனை ஒருபோதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது.
எப்போது ரேபிஸ் ஊசி போட வேண்டும்?
குறிப்பாக நாய் கடித்த , 24 மணி நேரத்திற்குள் முதல் ஊசி போடுவது அவசியம். - ஊசி போடப்படாவிட்டால், ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் 4-5 ரேபிஸ் ஊசி போட வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ரேபிஸ் நோயின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |