தலையில் பொடுகு இருக்கா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
தலைமுடியில் பொடுகு பிரச்சனை, இன்றைய பருவத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இது உங்கள் சருமத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தன்னம்பிக்கையையும் குறைக்கும்.
எனவே தான் மக்கள் இதை சரி செய்ய பல வழிமறைகளை பின்பற்றுகிறார்கள். இந்த வழிமுறைகளால் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என ஒரு புரிதல் அவர்களிடம் இல்லாமல் இருக்கின்றது.
இதை நீக்க தான் இந்த பதிவில் சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதாவது தெலையில் பொடுகு இருந்தால் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடுகு இருக்கும்போது செய்யக்கூடாதவை
தலையில் பொடுகு இருக்கும் போது எண்ணெய் தடவுதல், அடிக்கடி தலைமுடியைக் கழுவுதல் மற்றும் மிகவும் சூடான நீரில் முடியைக் கழுவுதல் போன்ற பழக்கங்கள் பொடுகுப் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும்.
இந்த தவறுகளிலிருந்துஉச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் தோல் உரிதல் பிரச்சனையை அதிகரிக்கும். பொடுகு இருந்தால், எண்ணெய் தடவுவது அதை மேலும் அதிகரிக்கும் என தோல் மருத்துவர் கூறுகிறார்.
காரணம் எண்ணெய் தடவுவதால் முடியில் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் எண்ணெய் தேங்கி, பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. இது உச்சந்தலையில் அதிக அழுக்கு சேர வழிவகுக்கும்.
இதன் காரணமாக தான் பொடுகு பிரச்சனைமேலும் மேலும் அதிகரிக்கிறது. உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால், உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் பசை வராமல் முடியின் நுனியில் மட்டும் லேசான எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது.
பொடுகு தொல்லை இருந்தால் முடியை ஒருவாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை என குறைவாக கழுவக்கூடாது. எனவே வாரத்திற்கு 3-4 முறை நல்ல பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவவும்.
வெந்நீரில் தலைமுடியைக் கழுவி நீண்ட நேரம் ஈரமான முடியை அப்படியே வைத்திருப்பது பொடுகுப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கும். எனவே தலைமுடியை கழுவ வெந்நீருக்கு பதிலாக புதிய நீரில் கழுவவும்.
இப்படி செய்தால் தலைமுடி பூஞ்சை தொற்றிலிருந்து விடுபடும். பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்ட நீங்கள் ஒருபோதும் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் தலைமுடியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |