உங்களின் சுருட்டை முடி நார் போல் இருக்கா? அப்போ இந்த Hair pack 2 தடவை போடுங்க
நம்மிள் சிலருக்கு சுருட்டை தலைமுடி இருக்கும். இவர்கள் அந்த தலைமுடியை எப்படி பராமரிப்பது என தெரியாமல் நார் போன்று வைத்திருப்பார்கள்.
இன்னும் சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று தலைமுடியை சாதாரண தலைமுடி போன்று ஆக்கிக் கொள்வார்கள்.
தேங்காய் நார் போன்று இருக்கும் சுருட்டை முடியை பராமரிப்பதற்கு சில பொருட்கள் சந்தையில் உள்ளது. இருந்தாலும் இயற்கை கிடைக்கும் சில பொருட்களை கொண்டு சுருட்டை தலைமுடியை இலகுவாக பராமரிக்கலாம்.
அந்த வகையில், சுருட்டை முடி உள்ளவர்களுக்கான சில நேச்சுரல் ஹேர் மாஸ்க் ஒன்றை தெரிவு செய்வது அவசியம். அப்படியாயின், சுருட்டை தலைமுடி உள்ளவர்கள் பயன்படுத்தும் ஹேர் மாஸ்க் ஒன்றை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுருட்டை முறையை பராமரிக்கும் Hair mask
1. தேங்காய் பால் + தேன்
சுருட்டை முடியுள்ளவர்கள் ஆழமாக மயிர்கால்களுக்கு ஈரபதத்தை கொடுக்க வேண்டும். அப்படியாயின், தேங்காய் பால், தேன் இரண்டையும் கலந்து ஹேர் மாஸ்க் போன்று செய்து தலைக்குள் படும்படி தடவ வேண்டும். அதனை 1 மணி நேரம் ஊற வைத்து விட்டு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
2. வாழைப்பழம் + அவகேடோ
சுருட்டை முடியுள்ளவர்கள் நார் போன்று இருக்கும் சுருட்டை முடிக்கு வாழைப்பழம் மற்றும் அவகேடோ இரண்டையும் நன்றாக கலந்து அப்ளை செய்ய வேண்டும். அதில் சில ஆலிவ் எண்ணெய் துளிகளையும் சேர்த்து கொள்ளலாம். இந்த ஹேர் மாஸ்க் போட்டு சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். சுருட்டை முடி பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
3. தயிர் + தேன்
சிலரின் தலைமுடியில் நுனி முடி சேதமடைந்து இருக்கும். அப்படியுள்ளவர்கள் தேன், தயிர் இரண்டையும் கலந்து நன்றாக தலைக்கு அப்ளை செய்ய வேண்டும். 30 நிமிடங்களுக்கு பின்னர் நன்றாக கழுவினால் சுருட்டை தலைமுடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அத்துடன் தலைமுடியில் உள்ள சேதங்கள் அனைத்தும் நாளடைவில் சரியாகி விடும். வாரத்திற்கு இரண்டு அல்லது 3 தடவைகள் செய்யலாம். செய்யும் முன்னர் காலநிலையை அவதானித்து கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |