கோழி முட்டைகள் எப்போது காலாவதியாகும் தெரியுமா?
கோழியில் இருந்து இயற்கையாக வரும் முட்டைகளுக்கு காலாவதி நாட்களும் உள்ளது அதை எவ்வளவு நாட்களில் சாப்பிட வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது.
முட்டையின் காலாவதி திகதி
பலரும் உடலுக்கு புரோட்டீன் தேவைப்படும் போது முட்டைகளை சாப்பிடுவார்கள். வீட்டில் உணவில் அடிக்கடி முட்டை சேர்க்கப்டுவது வழக்கம். இதனால் பலரும் ஒரே தடவையில் பல முட்டைகளை வாங்கி சேமித்து வைப்பார்கள்.
இப்படி சேமித்து முட்டைகள் வைத்தால் அதை எவ்வளவு நாட்கள் வைத்திருக்கலாம் என யாரும் அறிந்திருக்க மாட்டார். கோழி முட்டைகளை போட்டவுடன் சந்தைபடுத்த மாட்டார்கள் இரண்டு அல்லது ஒரு நாட்கள் கழித்து முட்டைகள் சந்தைக்கு வரும்.

அதை மக்கள் பலரும் எவ்வளவு நாட்களில் வாங்கிறார்கள் பின்னர் அதை சேமித்து வைக்கிறார்கள். அப்படி சேமித்து வைக்கும் போது முட்டைகள் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் உன்பது யாருக்காவது தெரியுமா?.
முட்டைகளுக்குக் கூட காலாவதி தேதி இருக்கும், தவறாக சேமித்து வைத்தால், அவை விரைவாக கெட்டுவிடும்.
ஒரு வேளை காலாவதியான முட்டைகளை சாப்பிட்டால் உடல் நலத்தில் பிரச்சனை உண்டாகும். மற்றும் கடுமையான உணவு விஷத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முட்டைகள் ஏன் கெட்டுப்போகும்?
முட்டைகள் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணம் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா. இது உணவில் விஷத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் ஆபத்தான பாக்டீரியாக்களில் ஒன்றாகும்.
முட்டையை எவ்வளவு நேரம் சேமித்து வைக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அதன் உள் அமைப்பு மாறுகிறது. ஆரம்பத்தில், முட்டையில் உள்ள காற்றுப் பை சிறியதாக இருக்கும்.
ஆனால் அது நாளாக நாளாக பெரிதாகிறது. இதனால் மஞ்சள் கரு கடினமாகவும், வெள்ளைக்கரு தண்ணீராகவும் மாறும். இதனால் முட்டையின் சத்துக்கள் அப்படியே இழக்கபடும்.

முட்டையை எவ்வளவு காலம் சேமிக்கலாம்?
முட்டைகள் கெட்டுப்போனால் அது முற்றிலும் உலர்ந்த கடினமான ஓட்டாகவும் மாறும். முட்டைகளை 3 முதல் 5 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
ஆனால் இதில் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. முட்டைகளை உறைய வைப்பது நல்லதல்ல. ஆனால் ஃப்ரீசரில் சேமிக்கலாம் ஆனால் அதன் ஃப்ரீசரின் வெப்பநிலை எப்போதும் 0°F (-18°C) க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு முட்டையை தண்ணீரில் போடும்போது மிதந்தால், அது கெட்டுப்போனதாக இருக்கலாம்.
நீங்கள் முட்டையை அசைத்து, திரவம் சுற்றி சலசலக்கும் சத்தத்தைக் கேட்டால், அது ஒரு பழைய முட்டை. குளிர்சாதன பெட்டியில் வைத்த முட்டைகளை மட்டும் 3–5 வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |