டீயால் வரும் ஆபத்தை ஒரு மாதம் நிறுத்தி வைப்போம்.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
டீ பிரியர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சமூகத்தில் டீயை நிறுத்தினால் நன்மை என நாம் போதனை செய்தால் அது யாருடைய காதுகளுக்கும் செல்லாது.
ஆனால் பிரியர்களுக்கு ஒரு சவால் விடலாம், உங்களால் டீயை சுமாராக 4 வாரங்கள் நிறுத்தி வைக்க முடியுமா? டீ ஒரு உற்சாக பானம், சுறுசுறுப்பாக இயங்கலாம் என ஏகப்பட்ட பலன்களை அடுக்கினாலும் டீ குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேநீர் அல்லது காஃபி அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு இதயம், பற்கள், வயிறு, மூளை, சருமம் ஆகிய அனைத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்றால் நம்ப முடிகிறதா? இப்படி ஏகப்பட்ட ஆச்சர்யங்களை கொண்டுள்ளது தான் டீ.
அந்த வகையில், டீ பிரியர் ஒருவர் ஒரு மாதம் டீ குடிக்காமல் நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
4 வாரங்களில் ஜொலிக்கலாம்..
1. நம்மிள் பலர் தூக்கம் இல்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களின் மன அழுத்தம், தவறான வாழ்க்கை முறை என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், காலையில் உற்சாக பானம் என எடுத்துக் கொள்ளும் காபியில் உள்ள கஃபைனும் ஒரு காரணம் தான். டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

2. முதிர்ந்த தோற்றம் இளம் வயதினரை தாக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இளம் வயதில் வயது முதிர்ந்தவர்கள் போன்று இருப்பவர்கள் டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். டீ, காஃபி குடிக்கும் போது இளம்வயதில் முதிர்ந்த தோற்றம் வருவதை தடுக்கலாம். எப்போதும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் இந்த தவறை இனியும் செய்யாதீர்கள்.
3. மூளை செயல்பாட்டை அதிகப்படுத்துவதால் டீ அல்லது காபிக்கு உங்களுடைய மூளை பழகி விடும். நீங்கள் அதனை குடிக்க தவறினால் சோர்வாகவும், கவலையாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. முடிந்தளவு எதையும் அளவுடன் வைத்துக் கொள்வதே சிறந்தது.
4. பளபளப்பான, பளிச் நிற பற்கள் வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. காஃபி, சோடா, டீ போன்ற பானங்களில் உள்ள கறைகள் நாளடைவில் உங்களுடைய பற்களுக்கு வந்து விடும். அதே போன்று உணவை மென்று சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் எச்சில் சுரப்பியை வரட்சியாக்கும். இது போன்று வாய்வழி பிரச்சினைகளையும் குடிக்காமல் இருக்கும் பொழுது நாம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

5. கஃபைன் ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். மீறி காபி அல்லது டீ எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் அதிகமாகி விடும்.
காபிக்கு பதில்
டீ, காஃபியை கைவிடும் முடிவில் உள்ளவர்கள் கஃபைன் சேர்க்காத மூலிகை தேநீரை அருந்தலாம்.
உதாரணமாக, புதினா டீ, க்ரீன் டீ, செம்பருத்தி டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |